பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கட்டபொம்மன் வழிமுறை. 23

ஆதிராமு டு-வது பட்டம்: 1230-1254.

இவன் இருபத்துநான்கு வருடங்கள் ஆண்டு வந்தான். இவனுக்கு இரண்டு புதல்வர்கள் பிறந்திருந்தனர். மூத்தவன் இளமையிலேயே இறந்துபோனன். ஆதலால் இளையவளுன

சின்னபொம்மு என்பவன் மன்னவனுய் அரசையடைந்தான்.

சின்ன பொம்மு.

சு-வது பட்டம்: 1254...1282.

இவன் நல்ல நீதிமான். சொல் வன்மை யுடையவன். வில் வலியில் சிறந்தவன். எல்லாருக்கும் இதம் புரிவதே தன் ச. மையாக எ ண் ணி யாண்டும் கருத்தோடு ஒழுகினன். இவன் இருபத்தெட்டு ஆண்டுகள் அரசு புரிந்தான். அதன்பின் இவன் மகளுகிய வீரராமு ஆட்சிக்கு வந்தான்.

வீரராமு.

ன-வது பட்டம்: 1282-1802.

இவன் தங்தைபோலவே எல்லா வகையிலும் சி ற ங் து இருபது வருடங்கள் இருந்தான். அதன்பின் இவனுடைய மகன் துரைராஜன் முறையே ஆட்சியை ஏற்ருன்.

துரைராஜன்.

அ-வது பட்டம்: 1302-1827.

இவன் நல்ல போர் வீரன். குதிரை ஏற்றத்தில் மிகவும் வல்லவன். இருபத்தைந்து வருடங்கள் குடிபுரங்திருந்தான். பின்பு இவனுடைய மகன் நல்லபொம்மு அரசுக்கு வந்தான்.