பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பாஞ்சாலங்கு றிச்சி வீர சரித்திரம்.

நல்ல பொம்மு.

க-வது பட்டம் 1327–1354.

இவன் எல்லா வகையிலும் நல்லவன். சிறந்த நீதிமான். இருபத்தேழு வருடங்கள் இருந்தான். பின்பு இவன் மகன் முத்துவிஜயராமு @ങ്ങി புரிந்து வந்தான்.

முத்துவிஜயராமு. 0-வது பட்டம்: 1854-1375.

இ வ ன் பல கலைகளிலும் வல்லவன். இருபத்தொரு வருடம் காட்டை இனிது பேணி இறைமுறை புரிந்தான். பின்பு இவனுடைய மகன் வீரசூடாமணி பட்டத்துக்கு வந்தான்.

வீரசூடாமணி.

கக-வது பட்டம்: 1875-1405.

இவன் அருந்திறலாளன். சிறந்த போர்வீரன். பெருங் தன்மையுடையவன். குடிகள் எவ்வழியும் இனிதுமகிழ முப்பது ஆண்டுகள் இவன் முறைபுரிந்திருந்தான். பின்பு இவனுடைய மகன் தளவாய்க்குமாரசாமி அரசை அடைந்தான்

தளவாய்க்குமாரசாமி.

கஉ-வது பட்டம்: 1405-1428.

இவன் மல்வலியில் சிறந்தவன். மல்லர்களை வளர்த்து ஒருவரோடு ஒருவர் மல்லாடச்செய்து அவர்தம் வல்லாண்மை காண்பதே பொழுது போக்காகப் பொருந்தி முழுதும் வாழ் வைக் கழித்து வந்தான். இருபத்துமூன்று வருடங்கள் இருக் தான். அதன்பின் இவன்மகன் வீர மல்லு ஆட்சிக்கு வந்தான்.