பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

ஜெகவீரராமு.

E_F- வது பட்டம்: 1568–157 5.

இவன் அறிவிலும் ஆண்மையிலும் மிகச் சிறந்தவன், குறிப்பறிதலில் வல்லவன். பெருங்கொடையாளன். புலவர் கள்பால் பேரன்புடையவன். உலக நிலையை ஒர்ந்து ஜமீனப் பலவகையிலும் உயர்த்திப் பாதுகாத்து வந்தான். பின்பு

இவனுடைய மகனுகிய துரைராஜபாண்டியன் அரசுபுரிந்தான்.

துரைராஜபாண்டியன்.

உடு-வது பட்டம்: 1575-1583.

இவன் தெலுங்கு தமிழ் சமஸ்கிருகம் என்னும் மூன்று பாஷைகளையும் முறையே கற்றுப் புலமையுற் றிருந்தான். சங்கீதத்தில் மிகவும் வல்லவன். இவனுடைய வாய்ப்பாட்டு எவரையும் பரவசப்படுத்துநிலையில் பேரினிமைய்ோடு பெருகி யிருந்தது. எட்டு ஆண்டுகள் ஆண்டிருந்தான். இடையே குடல் நோயால் இறந்து போனன். இவனுக்குப் புதல்வர் இல்லை. ஆகவே இவன் தம்பி கெட்டிதளவாய் என்பவன்

பட்டத்தை யடைந்தான். ஆட்சியை நடத்திஞன்.

கெட்டிதளவாய்.

உசு-வது பட்டம்: 1583-1588.

கன் கமையன் ஆட்சி நடத்துங்கால் உடனிருந்து இவன் துணை புரிந்து வந்தானதலால் அரசு முறையை நன்கு தெரிங் திருந்தான். எவரும் வி யங் து கொண்டாடும்படி குடிகளை உரிமையோடு இனிது பேணி வந்தான். ஐந்து ஆண்டுகளே யிருந்தான். அதன்பின் இவன் மைக்களுகிய விஜயரகுராமன்

என்பவன் பட்டத்துக்கு வந்தான். பண்புடன் ஆண்டான்.