பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கட்டபொம்மன் வழிமுறை. 29

விஜயரகுராமன். உ.எ-வது பட்டம் 1588-1595. இவன் வாளாடலில் வல்லவன். மல் வலியிலும் வில் வலி யிலும் மாண்புற்று கின்ருன். ஏழாண்டு வரை யிருந்தான். பின்பு இவன் மகனுகிய ராஜபொம்மு என்பவுன் ஆட்சிக்கு வந்தான்.

ராஜ பொம்மு. உஅ-வது பட்டம்: 1595-1604. இவன் சிறந்த போர்வீரன். ஒன்பது ஆண்டுகள் இருந் கான். இவனுக்குப் புத்திரரில்லை. இவனுடைய கம்பியாகிய விர சென்னவன் என்பவன் நேரே அரசை யடைந்தான்.

வீரசென்னவன்.

உகூ-வது பட்டம்: 1604-1611. இவன் அழகிலும் அறிவிலும் சிறந்தவன். சித்திரம் வரைவதில் மிகவும் கைதேர்ந்தவன். ஏழு வருடங்கள் அரசை இனிது பேணி 'இருந்தான். அதன்பின் இவன் மகனுகிய பராக்கிரமபாண்டியன் என்பவன் பட்டத்துக்கு வந்தான்.

பராக்கிரமபாண்டியன். கல்வது பட்டம்: 1611-1628. இவன் பன்னிரண்டு. வருடம் பாதுகாத்தான். பின்பு இவன் மகனுகிய விஜயரகுபதி என்பவன் பட்டத்தை படைக் கான். அட்சி முறையை நன்கு ஆதரித்து வங்தான்.

விஜயரகுபதி. க.க-வது பட்டம்: 1623-1630. இவன் ஏழு வருடங்கள் ஆண்டு இருந்தான். அதன்பின்பு துரைராஜபொம்மு என்பவன் கேரே ஆட்சிக்கு வந்தான்.