பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

பொழுதே உடைத்து ஒழித்து நம் ஊரை யடைந்து அங்கே புகுந்துள்ள பேரை யெல்லாம் நீறு செய்து நிலவறையில் வைத் துக் குலவிரம் காட்டிப் பேரும் புகழும் பெருக்கிப் பாராள வேண்டும். வீரர் பதியே! பகைக்கு அடங்கி நிற்பது நகைக்கு இடமாகும். விரைந்து துணிந்து வெளியே போய் விடவேண்டும்.

மன்னன்:- கும்பினியார் செய்துள்ள உதவிகளை நன்றி யறிவுடன் நினைக்து நலமாகத்தான் நான் நடந்து வந்தேன்; வகை கெரியாமல் பகை வந்து மூண்டது. இடையே நேர்ந்த படைத்தலைவரிடம் நம்மால் பணிவு காட்ட முடியவில்லை. விஜன விளைந்தது; இனி அதனை நினைவதால் பயனில்லை. இன்று நீ சொல்லுகிறபடி இச் சிறு சிறையை நீறு செய்து மீறிப் போய் விடலாம். கொண்டைமான் அரண்மனையில் நாம் அகப்பட நேர்ந்த பொழுது 'இனி நான் எதிர்ப்பு ஒன்றும் செய்யேன்” என்று கும்பினியின் ஆணைக்கு அடங்கி உறுதி செய்துள்ளேன் ஆதலால் இறுதி வரையும் பொறுதி செய்து எதிரியினுடைய கெறி முறையையும் நீதி நிலையையும் நேர்ந்து பார்ப்போம்.

தம்பி:- எதிரிகளை விட எட்டப்பன்தான் நமக்கு இடர் மிகச் செய்துள்ளான். அன்று நாம் பிடிபட்ட பொழுது அவன் கொண்ட மகிழ்ச்சிதான் என்னே! கொண்டையான விட அவ உடைய இரண்டகம் கொ டியத, சாதியபிமானம் இல்லாமல் போகுலும் தேசாபிமானமும் கூட இல்லையே! இனத் துரோகம் தேசத் துரோகங்களை எவ்வளவு கூசாமல் செய்து நிற்கின்ருன். கம் ஆதீனத்துக்கு ஆதியி லிருந்து அவன் புரிந்து வந்துள்ள துே கள் அளவிட லரியன. இவ்வளவுக்கும் காரணம் என்ன?

மன்னன்:- காரணம் பொருமைதான். இவ் அல்லல்களுக் கெல்லாம் மூலகாரணம் அவன் தானே. அது செய்தான்; இது செய்தான்; துட்டன், வம்பன், எனக் கும்பினியாரிடம் நம் மைக் குறித்துக் கோள்கள் பல சொல்லி ஓயாமல் விண்ணப்பங் கள் செய்து இக் கொடும் பகையை மூட்டி இவ்வாறு குடி கேடு நீட்டினன். அதற்கு ஏற்ப நெல்லைக் கொள்ளே செய்து பிள்ளை உள்ளே யிருந்து வினையை விளைத்தார். அவன் வெளியில்