பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

சேர்ந்தார். அங்கே சயத்தாறுடன் கருக்கி யிருக்கும் அக் துரையைக் கண்டு முறையே வணங்கி கிரையா யிருந்தார். பாண்டி மண்டலம் எங்குமுள்ள குறுகில மன்னரும், பெரு நிலக் கிழவரும், உக்தியோக அதிகாரிகளும் அவன் கட்ட ளைக்கு அஞ்சி ஒருங்கே வந்து அங்குத் திரண்டு கின்ருர் ஆக லால் அந் நிலையில் அவ்வூர் ஒர் பெருங்கோலமாய் விளங்கி நின்றது. அக் கூட்டத்திற்குக் கூளப்பகாய்க்கனூர் ஜமீன்தார் நாகம நாயக்கர் மட்டும் வரவில்லை. மற்றெல்லாரும் வந்திருந்தார்

இருவர் இருப்பு.

அங்கே வந்த பாளையகாரருள் சிவகிரி ஜமீன்தார் ஆகிய வரகுண பாண்டிய வன்னியனரும், எட்டையாபுரம் ஜமீன்தா ரும் உள்ளக் களிப்புடன் உற்சாகமாய் உச்ச நிலையில் ஊக்கி யிருந்தார். அவருடைய எண்ணங்களும் செயல்களும் புன்மை படிந்து புலைநிலைகளில் பொங்கி நின்றன. யாருக்கும் அடங்கா மல் அரிய போர் வீரனப் இறுமாந்திருந்தவன் பெரிய கும்பினி யாரின் எதிரியாய்ச் சிக்கி வந்துள்ளான்; இதிலிருந்து தப்பி இனி இவன் மீண்டு போக முடியாது; ஈண்டு மாண்டே படு வான்’ என இன்னவாறு எண்ணி எண்ணி நெடிய மகிழ்ச்சி யோடு அவர் நீண்டு கின்ருர். அவருடைய உள்ளங்களில் பொருமையும் பகைமையும் ஓங்கி நின்றன ஆதலால் இரக்கமும் நீதியும் யாதும் இல்லாமல் ஒழிந்து போயின. பொல்லாத போக்கில் இருவரும் ஒருவராய் மருவி மகிழ்ந்து இறுதியை எதிர்நோக்கி இம் மான வீரன் மேல் கறுவு கொண்டு களிக் திருந்தார். அயல் நாட்டு வெள்ளையர் இந்நாட்டில் புகுந்துஆளும் தலைவராய் நேர்ந்தது கமக்கு நாளும் கலைமையான நிலைமையா யது என அவர் நெஞ்சம் உவந்து நின்ற நிலைகளை அவருடைய செயல்கள் அங்கே நன்கு விளக்கி நின்றன. கூடியிருந்த பாளை யகாரர் பலரும் அந்த இருவர் புரிகிற கெடு நிலைகளை உணர்ந்து கடிது இகழ்ந்து செயல் இழந்து அயல் ஒதுங்கி யிருந்தனர்.

- _