பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.24. பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

பின் தொடர்ந்தார். அரசை மட்டும் தனியே அழைத்து வரும் படி உத்தரவு ஆதலால் நீங்கள் உடன் வர லாகாகென்று மற்ற வரைத் தடுத்தார். ஊமைத் தம்பி நான் உடன் வருவேன் என்று உருத்து கின்ருர். மன்னர் மறுத்து நோக்கி, கம்பி மற்றவ ரோடு இங்கேயே இரு; கான் மட்டும் போப் நீதி விசாரணை யின் கிலை தெரிந்து வருகிறேன்; சிறிது பொறுத்து கில்' என்று அவரை நிறுத்தி விட்டு இவர் கடுத்து வந்து சங்கம் சார்ந்தார்.

இவரைக் கண்ட வுடனே அங்கிருக்கவர் எல்லாரும் வியக் தும் வெருண்டும் மருண்டும் கின்ருர். அவரனேவரையும் ஒரு முகமாக ஒரு பார்வை பார்த்துவிட்டுக் குறித்த இடத்தில் சிங் கம் அடங்கித் திமிர்க் திருந்ததுபோல் இவர் செயிர்த்திருந்தார். சேனைத் திரள்கள் யாண்டும் திரண்டு நீண்ட பாதுகாவலாழ் மூண்டு நின்றன. கொடிய கொலைக் கருவிகள் கெடிது நிலவின.

ஏந்திய வெடிகள், எடுத்த வேல்கள், பிடித்த வாள்களோடு படை வீரர்கள் தொடுத் தடர்ந்து கிரையே சூழ்ந்து கின்றனர்.

சிறையி லிருந்து இவரை அழைத்து வரும்பொழுத அக் நகரி லிருந்த ஆண் பெண் அடங்கலும் ஒருங்கு திரண்டு வந்து உளம் மிக இரங்கிப் பல பல பேசி அயல் எங்கும் நெருங்கி இம் மன்னருக்கு என்ன விளையுமோ? யாது நேருமோ? என்று இன்னல் மீக் கூர்ந்து ஏங்கி நின்ருர், தேச மக்களுடைய நேச

மும் நிலையும் பாசம் தோய்ந்து பரிவுமீதார்ந்து உரிமையா வந்தன.

இக் காட்டி லுள்ள குடி சனங்கள் எல்லாரும் மனம் மிக வருகி மறுகி இருக்கார் ஆகலால் இக் குலவிார்பால் அவர்

கொண்டிருந்த உள்ளன்பும் உரிமையும் அன்று உணர கின்றன.

உற்ற துணே ஒத்திருந்தது.

பக்கம் எங்கும் தக்க பாதுகாவ லுடன் எல்லா ஆதரவு களும் அமைக்து கூடாரங்களின் முன் கூடியிருந்த சபைநடுவே சேனதிபதி யாகிய பானர்மேன் (Bannerman) நீதிபதி போல் நேரே அமர்ந்து விசாரணை தொடங்க ஆயத்த மாயினன்.