பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. காரியம் சூழ்ந்தது 329

பிற்கட்டு துரையும் உம்மிடம் நேரே வற்புறுத்திச் சொன்னது உண்டா? இல்லையா? உண்மையைச் சொல்லும்?

கெடிவெட்டுர்:- நீங்கள் சொன்ன புத்திமதிகள் எல்லா வற்றையும் நேரே கேட்டுக் கோட்டைக்குள்ளே போய் ஜமீன் தார வர்களிடம் சமாதானம் சொல்லிக்கொண் டிருந்தேன்; அப்பொழுது வெளியி லிருந்து வந்த படை வீரர்களால் எப் படியோ கடுமையாப்ப் போர் மூண்டு விட்டது.

பானர்மேன்:-சண்டை நடக்கும் பொழுது கட்டபொம்மு ாாயக்கர் கோட்டைக்குள்ளே தானே இருக்கார்?

கெடிவெட்டுர்:- உள்ளேதான் இருந்தார்கள். பானர்மேன்:-நீர் அவருக்கு அந்தரங்க வுரிமையாளராய் எப்பொழுதும் அருகில் இருப்பவர் தானே?

கெடிவெட்ர்ே:- ஆமா. இங்கனம் விசாரித்து முடிந்த பின்பு கலெக்டர் முன்பு இவருக்கு விடுத்திருந்த கட்டளைக ளெல்லாம் நேரே எடுத்து வாசிக்கப்பட்டன. சேனைத் தலைவன் எழுதியிருந்த கிருபங்களும் இக்கிருபருக்கு அறிமுகம் செய்து ஒரு முகமாய் உரைத்தான்.

இவ்வாறு எல்லா விசாரணைகளையும் செய்து முடித்த பின் னர்ச் சேனதிபதியாகிய பானர்மேன் இவரை நேரே நோக்கி "இங்கே உம்மைக் குறித்துச் சொல்லப்பட்ட சாட்சியங்கள் எல்லாவற்றையும் இதுவரை நேரே கேட்டிருக்கிமீர்; இவற்றுள் ஏதேனும் நீர் மறுத்துச் சொல்லவேண்டியது உண்டா?"

அதற்கு இவர், 'சொல்லியன எ ல்லாம் உண்மையில் நடக் தவைகளே, ஒரு தவறும் இல்லை” எ ன்று உறுதியோடு கூறினர். அங்கனம் சொல்லும்பொழுது மிகவும் அலட்சியமாகப் பானர்மேனே இகழ்ச்சிக் குறிப்புடன் நோக்கி இறுமாந்து நிமிர்ந்து சொன்னர் ஆதலால், "இவனுடைய அகங்கையைப் பார்த்தீர்களா?' என்று அருகிருந்த துரைகளிடம் கண் சாடை காட்டிக் கடுப்பு மீக்கொண்டு கடித்துத் தின்று விடுபவன் போல் அவன் உள்ளுறக் கொதித்து மிகவும் உருத்து கின்ருன்.

42