பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

முதலிலிருந்து சாட்சியங்களுடன் வகுத்துச் சொல்லி வந்த வற்றை யெல்லாம் தொகுத்து இணைத்துக் குற்றங்கள் எனக் கொழித்து எடுத்து வெளிக்கு மெய்ப்பிக்க இவரை நோக்கி அவன் விரித்து உரைத்தான். அவனுடைய விரிவுரைகள் கரவுகள் கோய்ந்து விரகுகள் குழந்து வெப்ப நிலையில் விரிந்து வந்தன.

குறித்துச் சொன்ன குற்றங்கள்.

பாஞ்சாலங்குறிச்சிப் ப்ாளையகார ராகிய கட்டபொம்மு காயக்கர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் : “ கும்பினிக்கு உரிய கிஸ்தியைச் செலுத்தாமல் வம்பு செய்திருக்கிமீர் ! கலெக் டர் லவிங்ட்டன் விடுத்த உத்தரவுகளுக்குச் சரியான பதில் எழுதாமலும், தம்மை வந்து கண்டு போம்படி பல முறை அவர் விரும்பி அழைத்தும் நேரே போய்ப் பாராமலும் கின்று பராமுக மாப் அவரை இகழ்ந்திருக்கிமீர் கானுபதிப் பிள்ளையை விடுக் துக் கொள்ளை முதலியன செய்து எங்கும் அல்லல் விளைத்திருக் கிறீர்! சிவகிரி முதலிய சில பாளைய காரர்களின் மீது படைகளை ஏவி இடையூறுகள் செப்த ள்ளீர்! கும்பினியின் ஆட்சி யுரி மையை அறுவுறுத்தி உம்மை அமைதி செய்ய எண்ணி வந்த என் சேனைகளை அகியாயமாய்க் கொன். தொலைத்தீர்! இத்த கைய குற்றங்கள் உம்மேல் சாட்டப்பட்டுள்ளன. இவற்றுள் இTதாவது ஒன்றை இல்லையென்று 蒿茂 மறுத்துச் சொல்ல முடி யுமா?’ என்று அவன் முடிவு செய்து கேட்டான். கேட்கவே இவர் அவனே எதிர்த்து நோக்கி, நீர் இங்கே சொன்னவை யாவும் உண்மைகளே; அவை குற்றங்கள் என்று குறித்தீர்! அதுதான் உம்மிடமுள்ள பெருங் குற்றம்' என்ருர். அங்கனம் கூறவே அச் சேனைத் தலைவன் சீறி, ஏன் இவை குற்றங்கள் ஆகா!' என்று மாறி வினவினன். வினவவே இவர் வரன்முறை யாக முறையே சொல்லலானர். சொல்லிய வகையும் தொகை

யும் பல்வகை நிலைகள் படிந்து வந்தன; அயலே வருகின்றன.

கட்டபொம்மு பதில் உரைத்தது.

1. இதுவரை யாருக்கும் திறை தந்தது இல்லை ஆதலால்