பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

up n eবা f aৈo.

தன் மீது கெடிது முரண்கொண்டு கொடிய கொலே நோக் கோடு அவ் வெள்ளைத் தளபதி உள்ளம் கடுத்திருப்பதை அறிக் தும் இவர் யாதொரு பணிவும் காட்டாமல் அடலாண்மையோடு மிடல் கொண்டு நின்றது. இவரது இயல்பான மான விர கிலே களை வரைந்து காட்டிச் சிறந்த நீர்மையைத் துலக்கி யுள்ளது.

ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அங்கிலேயே கெட்டான் எனப்படுதல் கன்று. (குறள், 967)

தன்னை இகழ்ந்து கிற்கும் பகைவர் பின்னே இழிந்து சென்று அவரைப் புகழ்ந்து பேசி உயிர் வாழ்வதை விட அது செய்யா மல் தன் மானத்தைக் காத்து அந்த நிலையிலேயே செத்தான் என்னும் கீர்த்தி ஒருவனுக்கு என்றும் நல்லதாம் எனக் கேவர் குறித்த இக்கத் தெய்வக் திருமொழியைத் தனக்குக் கனி யுரிமை யாச் செய்து கொண்டு இம் மான வீரன் அன்று அங்கே வென்றி விருேடு நின்று வந்தது என்றும் எவர்க்கும் அரிய பெரிய மேன்மையைவிளக்கி உரியசீர்மையைத் துலக்கிகின்றது.

மானம் அழிந்து உயிர் வாழ்வது ஈனம் என்பதை இவரு டைப வாழ்க்கை முழுவதும் மோனமா யுணர்த்தி வந்துள்ளது. அவ் வுண்மையை இதில் யாரும் எளிதே உணர்ந்து கொள்ள லாம். சேனைத் தலைவனே நோக்கி இவர் கூறிய வுரைகள் வீரிய ஒளிகளாய் விறு கொண்டு வெளி வந்துள்ளன.

பொது மக்கள் நிலை.

இவர் பேசி வருங்கால் அயலே மூசி கின்ற நகர மக்கள் ஒசையின்றி உவந்து கேட்டார். உரையாடுக் திறனையும், உருவ நிலையையும், உற்றுள்ள அவதியையும் நோக்கி உள்ளுற மறுகி ஞர். அவல நிலையிலும் கவலை யாதமின்றி வயிரிகள் முன் நின்று கைரியமாய் வாதாடிய இவ் வீரரது ரே நிலையை வியந்து யாவ ரும் புகழ்ந்தார்: கைதியாய்ப் பிடிபட்டு வந்தும் இக் கட்டழ கன் சிறிதும் அஞ்சாமல் கம்பீரமாய் நிற்கும் காட்சியைப் பார்த் இர்களா? இவ் வல்லாளனுக்கா இந்த அல்லல் வரவேண்டும்?