பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

உலக நிலையை நன்கு தெரிந்து கலைகலமுடையாரைக் கருதிப் பேணிப் பலவகையிலும் குடிகளுக்கு கலம் புரிந்து இவன் தலைமையொடு ஆட்சியை ஆதரித்து வந்தான். பின்பு இவன்

கம்பியாகிய ஜகவீர ராகவன் அரசினை அடைந்தான்.

ஜகவீரராகவன். ச0-வது பட்டம்: 1681-1689.

இவன் படையிலும் கொடையிலும் உயர்ந்தவன். சிறந்த போர் விரன். ஆட்சிமுறையில் அதி சமர்த்தன். இவன் காலத்திலேதான் சாலிகுளத்தைச் சாலவும் பெரிதாக்கி நெல் விளைவை நிலைபெறச் செய்தான். இவன் எ ட் டு வ ரு ட ம் அட்ட திசைகளும் புகழ அரசுபுரிந்தான். பின்பு இவன் மகன் சின்னபொம்மேந்திரன் பட்டத்துக்கு வந்து ஆட்சி புரிந்தான்.

சின்னபொம்மேந்திரன். சக-வது பட்டம்: 1689-1694.

இவன சிறந்த அறிவாளன். அருள் பொறை அடக்கம் முதலிய உயர் குணங்களெல்லாம் இவனிடம் ஒருங்கமைந்திருக் கன. நீதிமுறை கவருமல் குடிகள் இன்புற இவன் கோமுறை புரிக்கான். ஐந்து வருடம் ஜமீனை இவன் இனிது பாதுகாக்து வந்தான். இவனுக்குச் சங்கதி யில்லை. ஆதலால் இவன் கம்பி யாகிய ஜகவீர ராமக்குமாரசாமி பட்டத்துக்கு வந்தான்.

ஜகவீரராமக்குமாரசாமி. ச.உ-வது பட்டம்: 1694-1700.

கல்வியறிவிலும் நல்லொழுக்கத்திலும் இவன் மிகவும் சிறந்தவன். வினேசெயல் வகையில் வல்லவன். நிலங்களைத் திருக்திக் குடிகளை வளம்படுத்திப் பலவகையிலும் வருவாய்களை உளவாக்கி அரசை இவன் நன்கு பேணிவந்தான். பின்பு

இவனுடைய மகனுகிய இராஜசூடாமணி ஆட்சி புரிந்தான்.