பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 பாஞசாலங்குறிச்சி வீர சரித்திரம்

நாற்பது தொடங்கி கடந்து கொண்டு நின்றது.

இவர் பட்டத்துக்கு வந்தது 2-2-1790ல் ஆதலால் பத்து ஆண்டுகள் கூடச் சரியாய் நிறைவேறவில்லை. 9 வருடம், 8 மாதம், 14 நாளே அதிபதியாய்ப் பட்டம்ஆண்டிருக்கின்ருர்.

இவருக்கு சந்ததி இல்லை.

செல்வ நிலையில் சிற்றரசன் ஆயினும் உள்ள கிலேயில் உலகமெல்லாம வியந்து கொள்ளத்தக்க பெரு வீரராய் விளங்கி யிருந்த இத் ரே மன்னர் முடிவு இவ்வாறு தினமாய் முடிந்தது.

தலைமையான நிலையில் நிலவி யிருந்த இவர் உரிமை முழு வதையும் இழந்து, தமது விழுமிய கிலேமை திரிந்து பரிதாபமான துயர நிலையில் ஒழிந்து போனதை கினைந்தால் உலக நிலையின் உண்மையான ஒழிவு நிலைகளைத் தெளிவா யுணரலாகும்.

"இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாகிலம் உடையிலை நடுவனது இடைபிறர்க் கின்றித் தாமே ஆண்ட எமங் காவலர் இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக்

5. காடுபதி யாகப் போகித் தத்தம்

நாடு பிறர்கொளச் சென்றுமாய்க் தனரே! அதனுல் நீயும் கேண்மதி! அத்தை வியாது உடம்பொடு கின்ற உயிரும் இல்லை; மடங்கல் உண்ம்ை மாயமோ? அன்றே:

10. கள்ளி வேய்ந்த முள்ளியம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண் உப்பு இலாஅ அவிப் புழுக்கல் கைக்கொண்டு பிறக்கு நோக்காது இழி பிறப்பினேன். ஈயப் பெற்று

I5. கிலம்கல கை விலங்குபலி மிசையும்

இன்னு வைகல் வாரா முன்னே செய்ங் நீ முன்னிய வினேயே முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே." (புறம் 363)

உடை இலையின் பாதி அளவு கூடப் பிறர்க்கு இல்லாமல் உலக முழுவதும் தமக்கே உரிமையாகக் கொண்டு, தலைமை