பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கட்டபொம்மன் வழிமுறை. 35

ான். பின்பு வேண்டியவர்களோடு ஆராய்ந்து முடிவில் இப் பாண்டியனிடம் வந்தான். இந்த ஆண்டகை அவனே அன்போடு உபசரித்து வைத்து விருந்து முதலியன பெருந்தக வுடன் அளித்துத் திருந்துற இருந்தபின் வந்த காரியம் யாது? வன வகையுடன் வினவினன். வினவவே அவன் இந்த ாடு முழுவதும் எங்களுக்கு உரிமையாய்ப் பண்டுதொட்டு வரி செலுத்தி வந்தது. இது பொழுது மாறுபட்டு வேறு ாடோடு மீறியுள்ளது. பூலம், காஞ்சி நாடு முதலிய இடங் ாபரிலுள்ள மறவர் பலர் தி ர ண் டு எங்கும் புகுந்து வெங் கொடுமைகள் செய்து பங்கங்கள் விளைத்துப் படு துயர்கள் புரி சன்றனர். காட்டிலும் கொள்ளை, வீட்டிலும் கொள்ளை, ாட்டிலும் கொள்ளை, நகரிலும் கொள்ளை என உள்ள குடிக ளெல்லாம் உள்ளம் துடித்து உளைந்து கூக்கலிட அவர் கூட்டம் ... 'டமாய்க் கொடுமைகள் செய்து வருகின்ருர், படைகளை прі, படைத்தலைவர்களையும் அடுத்தடுத்து எவி அடக்கிப் பார்த் கேன். யாதொரு பயனும் இல்லை. எல்லாம் இ ைட யூ று க ளாகவே மண்டியுள்ளன. என்னுல் இயன்றவரையும் முயன்று வருந்தி முடியாமல் முடிவில் அருங் திறலோடு கொடையும் வாய்ந்துள்ள தும்மிடம் குறை முடிக்க வந்தேன்' என முறை யிட்டு அன்பு ததும்ப உரைத்தான். இங்கனம் அவன் கூறவே இவன் உவந்து ஆறுதல்கூறி 'இரண்டு மாதத்துள் ஏதம் அகற்றி ஆண்டவனருளால் ஆவனசெய்வல்; யாதும்கவலல்' என்ருன். அவன் மகிழ்ந்து விடைகொண்டு மாண்போடு சென்ருன்.

திக்கு விசயம். வாரம் ஒன்று கழிந்தபின் சிறந்த போர் வீரர்களோடு இவன் தென்திசை நோக்கி எழுந்தான். கட்டுவன் என்னும் தனது பட்டத்துப் பரி மீ தி வர் க் து படைகள் புடைசூழ அடைவுடன் நடந்து பூலம், மறவக்குறிச்சி முதலிய ஊர்களை

H இவ்விண்டு ஊர்களும் நாங்குநேரித் தாலுகாவிலுள்ளன. மறவர்

மரபினர் அங்கு மிகுதியாய் இப்பொழுதும் வாசஞ்செய்கின்றனர்.