பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

யடைந்தான். அடையவே ஆங்காங்குள்ள குறுநிலக் கிழவரும், குறிகாரர்களும் எதிர்கொண்டு கண்டு இனிது உபசரித்தார். வந்துள்ள நிலையை அறிந்து சிங்தை கலங்கி இனிமேல் தியன யாதும் நிகழாவண்ணம் இப் பக்கங்களெங்கும் பாதுகாத்து வருகின்ருேம் பாண்டியா!' எனப் பணிவுடன் கூறினர். இவன் மனம் மகிழ்ந்து எழுந்து காஞ்சிநாடு புகுந்து, கடலையுருவகை அ ட அ ற ச் .ெ ச ப் து, ஆரவாய்மொழி வரையும் ஆணையை நிறுத்தி, மேற்றிசை அடைந்து, சொக்கம்பட்டி முதலிய ஜமீன் களையெல்லாம் எச்சரிக்கை செய்து வரி செலுத்தி வரும்படி பணித்து வடதிசை ஏறினன். எறவே யாரும் மாறு நேராமல் விரைந்து பணிக்து விழைந்த வண்ணம் நடந்து வருவதாக உறுதி கூறி உவந்து நின்ருர். அவர்களை நிறுத்தி, வடமேற் றிசை புகுந்து ஆங்கு அடர்ந்து கின்ற குறும்பர்களையெல்லாம் அடலாற்றி வென்று மீண்டும் குறும்புகள் அரும்பாமல் வரும் படி விதித்து வடகீழ்த்திசை அடைந்தான். ஆங்கு கின்ற சிற்றரசரெல்லாரும் சீர்செய்து போற்ற நேர்செய்து நிறுத்தி இறுதியில் சேதுபதிபால் வந்து சேர்ந்தான். இக் கு ல ம க ன் வந்த நிலைமையை அத்தலைமகன் அறிந்து உளம்மிக மகிழ்ந்து விழைக்கழைத்து விருக்களித்து இராமேசுவரம் கொண்டுபோய் இராமனுதனச் சேவைசெய்து வைத்து ஆவனசெய்வதாக ஆணேகூறி ஆவலுடன் அனுப்பினன். அங்கிருந்தெழுந்து சிவகங்கையைச் சார்ந்து சீர்திருத்திக் கீழ்திசை வந்தான். வரவே தன் இனத்துப் பாளையகாரரெல்லாரும் பரிவுடன் வந்து பணிக்கேத்தி உரிமைசெய்து நிற்ப இவன் உறுதிகூறி நிறுத்திக் தன் திருநகர் அடைந்தான். ஒருமாதம் கழிந்தபின் சாதிகானை அழைத்துத் தான் தொகுத்து வந்திருந்த வரித்தொகையை உதவி இனிமேல் யாதும் காட்டில் அல்லல் நிகழாது; எல்லாரும் வரியை இனிது உதவி வருவர் என உரிமையொடுரைத்தான். இவனது உறுதிமொழியைக் கேட்டு அவன் பெரிதும் மகிழ்த்தான். அரிய விலையுடைய ஒரு மணி மாலையை எடுத்து