பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

வேதியனுக்கு இறுதியில் ஒரு கண் மட்டும் ஒளியுறச்செய்து மேற்ருெரு கண்ணேக் கட்டபொம்மு கொடுப்பான்; போ' என்று அசரீரியாக் கட்டளையிட்டருளினர். அவ்ஒலியைக்கேட்டு உளம்மிக வியந்து மறையவர் சிலருடன் அவன் பாஞ்சைக்கு வந்தான். அரசைக் கண்டான். பரமன் அருளியுள்ளதை உரிமையொடு உரைத்தான். அவ்வுரையைக் கேட்டதும் இவர் உள்ளந்திகைத்து உவந்து வியந்து ஆண்டவன் ஆட்கொண் டிருக்கும் நிலையை நினைந்து ருெக்குருகி நின்ருர். பின்பு உறுவது உறுகவென ஒருமனதாகி மறையவரை நோக்கி, பரமன் பணி இதுவேல் நாளை அது கருவல்' என வேளையை விதித்துப் படி முதலியன கொடுத்து அவரை அன்று உபசரித்திருக்தி இரவு உணவுகொள்ளாமல் விரதமோ டிருந்து மறுநாள் பூசையை முடித்து வாளும் கையுமாய் வெளியே வந்தார். கருதிய விழி கண்ணுருதாயின் தன் உயிரை மாய்த்துக்கொள்ள உறுதி செய்து இம் மன்னன் . வரவும் அங்கு நின்றவரெல்லாரும் நிலையெதிர்கண்டு நெடுங் திகில் கொண்டார். இவர் நெருங்கி வந்து முருகனை உருகி கினைந்து, மருங்கு நின்ற மறையவன் கண்ணில் தம் உள்ளங் கையை வைத்து உள்ளொளி வருக என உள்ளுறக் துதித்தார். உடனே கண் ஒளி வந்தது. இவ் அண்ணல் அகம்மிக உருகிப் பரவசராயினர். அருகே கண்டு கின்றவரெல்லாரும் களிப்பு மீக்கொண்டு பெரிதும் வியந்து இவரைத் தொழுது துதித்தார். அறுமுகப்பரமன் அருள் புரிந்துள்ள அருமையை எண்ணி எண்ணிக் கண்ணிர் மாலை மாலையாய் மார்பிலோட ஆரா அன்போடு அழுது நின்ற இவர் பின்பு தெளிவு கொண்டு குழுமி கின்றவரெல்லாரையும் விழைவுடன் இருக்தி விருத்து புரிந்தார். செந்தியிலிருந்து வந்திருந்தவரெவர்க்கும் வரிசை பல தந்தார். கண்கொண்ட மறையவன் பெண் கொண்டு மனம் செய்து கொள்ளும்படி பெரும் பொருளுதவிப் பேணி விடுத் கார். இவரது அருளின் பேற்றையும் பொருளின் கொடையை