பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

உரிமையை உதவிப் பெரியவர் ஒருவி யிருந்தார். பட்டம் தரித்தபின் பட்டத்து யானைமேல் அமர்ந்து குடை கொடி விருதுகள் கெடிது முன் செல்ல, பரிகளில் அமர்த்து துணைவர்கள் அயல்வா, அரிய பெரிய ஆடம்பரங்களுடன் பவனிவந்து, சபாமண்டபம் அடைந்து, உயர்ந்த ஆதனத்தில் உவந்து விற்றிருந்து கமர்முதல் எவரும் தாழ்ந்து வணங்கத் தண்ணளிபுரிந்து, தெய்வம் பராவிச் செய்வன செய்து இவர் இறந்து விளங்கினர். அரசநீதிகளை உரிமையோடு உணர்த்தித் தந்தையார் ஆறுதல் அடைந்திருக்க இம்மைக்கர் குடிகள் இன்புறக் கோமுறைபுரிந்தார். ஆட்சிகில மாட்சியுற்று வந்தது.

திேயும் விரமும் கொடையும் மன்னர்க்குச் சாதியின் தருமமாய்ச் சார்ந்து கின்றன; ஒதிய மூன்றினில் ஒன்று குன்றினும் போதிய அரசியல் புகழ்பெ ருதரோ. (1) விரமே பகைவரை அடக்கும், மெய்க்கொடை வாரமே புகழினை வளர்க்கும்; நீதியின் சாரமே தரணியைத் தாங்கும்; இந்தமுச் சீரமை அரசனே தேவன் ஆவல்ை. (2) செயிருறு கண்களைச் செகுத்து நீக்கிநற் பயிர்களேக் காத்தல்போல் படுவெம் பாதக வயிரரைச் சுட்டற மடித்து மாண்புறும் உயிர்களேக் காப்பதே உலகம் காப்பதே." (3) (வீரபாண்டியம்) இவ்வாறு கருதி எவ்வழியும் இவர் இனிது காத்து வந்தார். இவரது ஆட்சிக்காலத்தில் கி க ழ் ந் த நிகழ்ச்சிகளே பாஞ்சாலங்குறிச்சிச் சரித்திரத்தில் மிகவும் மாட்சிமையுடையன. ஆதலால் அந்த உண்மைக்காட்சிகளை இனிமேல் நாம் உரிமை யோடு துருவி நோக்குவோம். இதுவரை எழுதியுள்ளது. இச் சரித்திரத்துக்குப் பூர்வபீடிஸ்க்யான பாயிரமாம்; இனிவருவன சரித நிலைக்குக் கனிஉரிமைகளாம். நூலை மேலே காண்போம்.

--