பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காவது அதிகாரம்

வீர பாண் டிய ன்.

్మ

சஎ-வது பட்டம்: 1790-1799.

இக்கோமகன் பட்டத்துக்கு வந்தது, கொல்லம் ஆண்டு கூசுடு தை மாதம் இருபதாம் தெய்தி. அ ப் பொழு து இவருக்கு வயது முப்பது. தக்க பருவத்தில் அரசுரிமையை யடைந்து, தம்பியர் இருவரும் இளவரசராய் கின்று இதம் புரிந்துவர, உறவினரும் குடிகளும் உவகை மீக்கூர, உரிமை யோடு உறுதி பல சூழ்ந்து பெரிதும் பேணி அரசை இவர் ஆட்சி புரிந்தார். காப்பு முறைகள் கருத்துடன் கடந்தன.

இவருக்கு அமைச்சுத் துணையாய்ச் சிவசுப்பிரமணிய பிள்ளை என்பவர் அமர்ந்திருந்தார். அவர் வேளாளர் மரபினர். . தாளாண்மை மிக்கவர். கல்வியறிவிலும், செல்வநிலையிலும் சி ற ங் த வ ர். சொல்வன்மையிலும், சூழச்சித்திறத்திலும் வல்லவர். உறுதியும் ஊக்கமும் பெரிதும் உடையவர். கருதிய எதையும் கடைபோகச்செய்யும் திடம்மிக வாய்ந்தவர். அவருடைய தந்தை பெயர் குமாருப்பிள்ளை.

இக்குமரன் தந்தையாகிய திக்குவிசயத்துரையிடம் அவர் மந்திரியா யிருந்தார். தங்தையின் உரிமையை முறையே பெற்று இவ் அருமை மைந்தரிடம் வந்து கருமத்துணைவாய் அவர் மருவி யிருந்தார். வீரபத்திரபிள்ளை, பாண்டியம்பிள்ளை என்னும் சகோதர ர் இரு வ ர் அவருக்கு இருந்தனர், அண்ணன் சொன்னபடியே என்ன வகையிலும் இசைத்து அப்பின்னவரிருவரும் பின்னமின்றி கின்ருர். கருமச்சூழ்ச்சி யில் அவரும் முன்னவனேடு கன்னயம் புரிந்து மன்னியிருக் தார். அம்மூவரும் அரசை ஆவலோடு ஆதரித்து வங்கார்,