பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

உடன் பிறந்த துணைவரும், உற்ற துணைவரும் உறு துணையாய்ப் பக்கம்கின்று உதவிவரத் தக்க முறையில் மிக்க கவனத்தோடு ஜமீனை இவர் நன்கு பாதுகாத்து வந்தார்.

கம் குலதெய்வமாக முன்னேர் முதல் வழிபட்டு வந்த முருகக்கடவுளிடம் உருகிய பத்தியுடையராப் உரிமை பூண்டு நின்று அரிய பணிகள் பல ஆற்றி இவரும் ஆராதித்து வந்தார். திருவிழாக்காலங்கள் தோறும் திருச்செந்தார் சென்றிருந்து உற்சவங்களைச் செவ்வையாக கடத்தி எவ்வழியும் எழில் செய்து கின்ருர். விதிகள் தோறும் சிறந்த மண்டபங்கள் அமைத்து ஏழாந்திருநாள், ஒன்பதாம் திருநாள்களில் ஆண்ட வன ஆண்டு எழுந்தருளச்செய்து வேண்டிய விமரிசைகளோடு அலங்கரித்துப் பூசனைகள் புரிவித்து ஈண்டிய அன்புடன் இவ் ஆண்டகை இனிது போற்றி நீண்ட புகழுடன் நிலவி வந்தார்.

மாசி மாதம் ஒருமுறை சந்நிதியில் சாமியைத் தொழுது நிற்கும்பொழுது தம் மெய்யில் அணிந்திருந்த மணியணிகளை யும், முத்துமாலையையும் முற்றும் கழற்றி 'எம் ஐயன் முருகனுக்கு உரியன இவை' என இவர் பருகுகாதலோடு உருகிக் கொடுத்தார். அருகு கின்ற மறையவர் அனைவரும் பெரிதும் வியந்து இவரது போன்பைப் புகழ்ந்து மகிழ்க்தார்.

அன்று இரவு தன் நாயகனேடு எ காந்தமாகத் தனியே தரிசனைக்கு வந்திருந்த வீரசக்கம்மாள் என்னும் இம்மன்னன் மனைவியும் தான் அணிந்திருந்த அரிய ஆபரணங்களெல்லாவற் றையும் அவிழ்த்து 'இவை ஆண்டவன் தேவியருக்குரியன' என ஆர்வமோடு தந்தாள். அக் க ற் ப ர சி யி ன் அற்புதச் செயலை நோக்கி இவ் விற்பன வேந்தனும் வியந்து மகிழ்ந்தான். இச் சதிபதிகளின் உழுவலன்பும் கெழுமிய பண்பும் தொழுதகு தன்மையும் உள்ளுறு பத்தியும் உலகம்புகழ நிலவி நின்றன.