பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

இக் குலமகனது இயல்பும், அக் கலைமகளது உயர்வும், இதனுல் இனிது புலனும். இங்கனம் பேரன்போடு தெய்வம் பேணி யாரும் இன்புற அரசை இவர் நன்கு ஆகரித்து வந்தார்.

புலவரைப் போற்றியது.

விர நிலையில் உயர்ந்திருந்தது போல் கல்வியறிவிலும் இவர் சிறந்து நின்ருர் ஆதலால் நல்ல புலமையாளரை நாளும் நயந்து பரிசில் பல தந்து உரிமையோடு உவந்து பேணினர்.

தமது சமுகத்தில் புலவர்களுக்கு மாத்திரம் சம இருப் புத் தந்து வரிசை யறிந்து போற்றி வந்தார். வேங்கட சுப்பையர், வீரபாண்டியப் புலவர் என்னும் இருவரும் வட மொழியிலும், தென்மொழியிலும் முறையே புலமை யடைந்து இவ்வாதீனத்தில் சிறந்த வித்துவான்களாப் அமர்ந்திருந்தனர்.

அங்க இருவரையும் இரண்டு கண்களாகப் பாவித்து இவர் அன்போடு ஆதரித்து வந்தார். அவருள் வீரபாண்டியப் புலவர் என்பவர் நல்ல சீலமுள்ளவர். தூத்துக்குடி என்னும் திருமந்திர நகரில் பிறந்தவர். பாளுர் குலத்தினர். அவரது இயற் பெயர் சங்கரமூர்த்திபிள்ளை என்பதே. இந்த அரச அடைய அபிமானக்கை மிகவும் அடைத்திருக்கமையால் இவ் வாறு பட்டப் பெயரோடு விளங்கி கின்ருர். கொற்றமலி பாஞ்சாலங் குறிச்சி யதனிற் குலவும், சிற்றரசனும் ஒருவன் சிங்தை விருப்பினில் திளைக்கோன்' எனப் புலவர் புராணமுடை யார் அப் புலவரைக் கு த் து க் கூறியிருக்கல் ஈண்டறியத் தக்கது. அவர், முருகக்கடவுளிடத்து உள்ளங் கனிந்த பத்தி யுடையவர். சடாக்காக்கைச் செபித்துச் சிறக்க வாக்குப் பலிகமுடையராப் விளங்கியிருந்தார். ஒருமுறை சிவிகையூர்ந்து அரசன் திருச்செந்தாருக்குப் போனபொழுது பரிவாரங்களுடன் அப் புலவரும் உடன் போயிருக்கார் ஆக்தாரை அடைந்த பொழுது வழியிடையே ஒரு புளியமரக்கிளை மிகவும் கோண லாய்க் காழ வளைந்து நீள கின்றது. அதனை மன்னன் நோக்கி