பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்,

எவரும் வியந்து சொல்லும்படி விரத சீலராய் விளங்கியிருந்த அவர் பரிசில்கருதி இவ் அரசரிடம் வரும் புலவர்கள் எவர்க்கும் உடனிருந்து இகம் புரிந்து வந்தார். இங்கனம் அவர் சாதுவா யிருந்தாலும் வாது புரிய நேர்ந்தால் யாதும் காழாது மிகவும் மோதி நிற்பர். ஒருமுறை அரங்கமால் என்னும் அரசமாளிகை யில் பரதம் ஒன்று கடந்தது. அப்பரத நாட்டியத்தைக் கண்டு மகிழப் பலரும் வந்து அங்குக் குழுமியிருந்தார். இவ் அரசர் வந்து சிறங்க ஆகனத்தில் அமர்ந்தவுடன் காட்டியக் கலையில் மிகவும் வல்லவளாகிய வாசவதி என்னும் காசி அரங்கிலேறி அதிசய நிலையில் நடனம் புரிந்தாள். அவள் ஆடி வருகையில் ஆதீனப் புலவரது அருகேயிருந்த வரதராயன் என்னும் புலவன் அவளைச் சுட்டிக் காட்டித் தையல் நல்ல தையல்' என்று அவ ரிடம் பரிகாசமாகப் பையச் சொன்னன். தையல் என்னும் சொல் பெண்ணையும், தையல் தொழிலையும் குறிக்கும் ஆதலால் சிலேடையாக வைத்து அவரது குலகிலே தெரியக் குறிப்போடு உரைத்தான். தைக்கும் தொழிலினன் எனக் கம் சாதியைக் குறித்துக் குறும்பாக இ னி க் து க் கூறினன் என்று இவர் அறிந்துகொண்டு உடனே ஆட்டுக்கு நல்ல தையல்” என்ருர். ஆட்டு என்பது நடனத்தையும், ஆட்டையும் உணர்த்தும். அவ் வாயாடிப் புலவன் ஆயர் குலத்தினன் ஆகலால் ஆடுமேய்க்கும் இனத்தான் என அவ் இடைச் சாதியின் இயல்பு தோன்ற இங்ங்னம் இவர் மாறி உரைத்தார். அகளுல் இருவருளத்தும் கலாம் விளைந்து கதித்து நின்றது. பாதம் முடிந்து அவளுக்குப் பரிசில் தந்து அனுப்பியபின் புலவரிடை நிகழ்ந்த இக் கு.அ மொழிகளைக் கேள்வியுற்று, அரசர் ஒரு நாள் அவ்விருவரையும் அழைத்து உடனிருக்க வைத்து அறிவுரைகள் பல ஆடி வந்து முடிவில் கல்வியறிவுக்குப் பயன் யா து?’ என அ வ ரி ட ம் ஈயனுற வினவினர். வினவவே ஒழுக்கம் எனவும், அடக்கம் எனவும், உணர்ச்சி எனவும் தக்கமக்குத் தோன்றியதைத் தனித்

தனி யுரைத்தார், அவற்றை யெல்லாம் மறுத்து ஒருவனது