பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

வெளியி லிட்டஅப் பொருள்களேக் கண்டதும் வெய்யோர் ஒளிசெய் மன்னனே யுற்றவன் என்பதை யுணர்ந்து விளிவு நேர்ந்ததென் அளமுயிர் வெருவியே கின்ருர் தெளிவு ளோர்களும் திகைத்தனர் செய்வது தெரியார் (10)

அன்ன கால்வரை மன்னவன் அருள்கொடு கோக்கி இன்ன தாகிய இழிதொழில் ஈனமே யாகும்; துன்னு வெம்பழி பாவங்கள் இம்மையில் துய்த்து மன்னு வெந்துயர் நரகிடை மறுமையில் மடிவிர்; (11;

உமது புன்பொருள் ஒருவன்கை கவர்ந்திடில் உள்ளம் கமை யிழந்துறு துயருறக் காண்கிலீர் கொல்லோ? அமையும் அத்தகை அதுபவம் உள்ளுற அறிந்தும் தமது நல்லறி விழந்திது செய்வது தாழ்வே. (12)

கொண்டு போயுள்ள பொருள்களேக் கூடிய விரைவில் கொண்டு வாரும்என் றவர்களேக் கோமகன் விடுத்தான்; மண்டி யோடினர் மானமும் காணமும் கொண்டார் தண்டி வந்துடன் அரசவை வைத்தனர் தாழ்ந்தே. [13]

அடியில் வீழ்ந்தனர் கடவுள்மேல் ஆணேயாயிந்தக் கொடிய தீமையைக் கனவிலும் குறித்திலம் இனிமேல்; படிறு நீக்கியிப் படியெமைப் பவித்திர மாக்கிக் குடிசெய் தாண்டாற் குணமலேயே யெனத் தொழுதார். (14)

உற்ற அப்பொருள் உடையவன் அடைந்திட உதவி மற்ற வர்க்குண வுடையொடு வளநிலம் உதவிப் பெற்ற இங்கிலம் பேணியே எவரினும் விளேவை முற்றி டச்செய்து முறையொடு வாழ்மின் என்றுய்த்தான்.

வள்ளல் செய்தவில் வகையினே யாவரும் வியந்தார்;

கள்ள நீர்மையில் கழிந்திழிந் தொழிந்திட நின்ருர்

தள்ளரும் பெருந் திருவின ராய்த்தழைத் துயர்ந்தார் உள்ளம் இன்புற உருகியிம் மன்னனேத் துதித்தார். [16]