பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வீரபாண்டியக் கட்டபொம்மு. 63

பாவ காரிய மாகிய களவினேப் பயின்றே எவ மாயிழிந் தொழிந்திடா தின்புறக் காத்தான் காவ லன்புரி கருத்தினேக் காசினி யுள்ளார்.

ஆவ லோடறிந் தார்வமீ துார்ந்தன ரன்றே. [17]

இழிந்த வாசனை யுளத்திடை யிருந்திடில் இழிவே எழுந்து திவினே யியற்றிவெங் நரகினுக் கிரையாய் ஒழிந்து மன்பதை யுழந்திடு மென்றுளம் இரங்கிப் பொழிந்த அன்பினல் மறங்கடிந் தறம்பெறப் புரிந்தான். (18)

குற்றஞ் செய்தபின் கொடுந்தண்டம் செய்வது தன்னின் உற்ற குற்றமுன் ஒழித்திடல் நலமென வுணர்ந்து பற்று திங்குகள் பாரினில் பரவிடா தோம்பி வெற்றி வேந்திவன் விரகுடன் அருள்செய்து கின்றன். (1.9)

உயிர்கள் இன்புற உலகிடை யுள்ளுறக் கிளர்ந்த செயிர்கள் நீக்கினன் களேகளேக் களைந்தெழில் சிறந்த பயிர்கள் ஓங்கிடப் பண்ணுகல் லுழவனே போல அயில்கொள் வேலுடை யுழவனம் அருந்திறல் மன்னன். '

(வீரபாண்டியம், குடிபுரந்த படலம்.)

தமது அரசில் பட்டிமை யாதும் படியா வண்ணம் பாது காத்து இவர் படிபுரந்திருக்கும் பான்மையும், குற்றம் கடிந்து குணம் புரிந்திருக்கும் மேன்மையும் இதல்ை இனிது புலனும். கள்ளம், பொய் முதலிய தீய இயல்புகள் உள்ளம் புகுந்திடின் வாசன வசமாய் வளர்ந்து மக்களை நீச நிலையில் கள்ளிவிடும் ஆதலால் அவற்றை இளமையிலேயே உள்ளுற ஒட்டாது கிள்ளி யெறியவேண்டும் என்பது ஒள்ளியோர் கருத்து, அவ்வாறே இவ் வள்ளியோரும் உள்ளி ஒர்ந்து வழிமுறை ஆப்க்.து, வான் முறை தோய்ந்து, பழிகிலே களைந்து பண்பாற்றி ஒழுகி வந்தார்.

மானமும் வீரமும் மருவி வானுயர் புகழொடு மருவி நின்ற இக்கோனிடம் திரண்ட சேனைகள் செறிந்திருந்தன. தோள்