பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

கொடையினில் கன்னன் என்பார்; கோலத்தில் குமரன் என்பார்; நடையினில் இராமன் என்பார்; நலத்தினில் சயந்தன் என்பார்; படையினில் விசயன் என்பார்; பரியினில் நகுலன் என்பார்;

விடையும்வெம் மடங்கலும்மே விறல்கடைக் கெகிராம் என்பார்.

இன்னவாறு யாவரும் வியந்து புகழ இவரது மனை வாழ்க்கை இனிமை சுரந்து மகிமை நிறைந்து கின்றது. பண்பு நலம் கனிந்த மனைவி அமைந்தமையால் இவர் வாழ்வில் இன்ப நலன்கள் பொங்கி எவ்வழியும் இசைகள் பெருகி யிருந்தன.

இல்லவள் இனியளேல் யாவும் இன்பமாம். என்பதை இக்கோமகன் நன்கு அனுபவித்து வந்தான்.

காட்டைப் பாதுகாத்து நலங்கள் பல நாட்டிக் குடிகளை எங்கும் நன்கு பேணி வங்கமையால் தேசம் முழுவதும் வாஞ்சை மீதுளர்ந்து பாஞ்சையைப் புகழ்ந்து வந்தது. செல்வ வளங்களை அடைந்து எல்லாரும் எவ்வழியும் இனித வாழ்ந்து வர இவர் தனி உரிமையுடன் இறை முறை புரிந்து வந்தார்.

செல்வ வளங்கள் செழித்துவர நல்ல

சீர்த்திகள் எங்கும் தழைத்துவர நல்ல வழிகளில் நாடாட்சி செய்துமே

காட்டில் திசைகம்பம் நாட்டி கின்ருன். (1) காட்டில் திரிந்தாலும் காட்டில் இருந்தாலும் கள்ளர் பயம்.எங்கும் இல்லை என்று கூட்டில் கிளிகளும் பாஞ்சைமன் கீர்த்தியைக்

கூறி யுவந்தன சீருடனே. என இன்னவாறு பாடி வருகிற நாட்டுப் பாடல்கள் இவருடைய ஆட்சியின் மாட்சிகளை நன்கு காட்டியுள்ளன. உயிரினங்கள் துயர் உருமல் இயலுரிமையோடு இவர் அரசு புரிந்து வந்தது உயர்ககைமையாய் ஒளி வீசி யிருந்தது.

இங்கனம் இருந்து வருங்கால் மாறுபாடு ஒன்று புதிதாய்க் கிளர்ந்து இவருடைய ஆட்சியுள் மீறி எழுந்தது. அது எழுந்த நிலையையும், எய்திய வகையையும் இனிமேல் காண்பாம்.

- ===