பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐ ந் தா வது அ. கி கா ர ம் கும்பினி சார்ந்தது.

ஐரோப்பாக் கண்டம் ஆகிய மேல் நாட்டில் இருந்து எழுந்து இக்காட்டில் வந்து ஆங்காங்குத் தங்கி வெள்ளைக்காரர் சிலர் வியாபாரம்செய்தனர். முதலில்,வட இந்தியாவில்புகுந்தனர்; பின்பு தென் இந்தியாவை அடைந்தனர். அக் காலத்தில் சந்திர கிரி அரசினுள் செங்கற்பட்டிலிருந்து அரசு புரிந்து வந்த சென் னப்பநாயக்கர் என்னும் சிற்றரசனிடம் வந்து தாங்கள் தங்கி யிருத்தற்குக் கடற்கரை ஓரம் சிறிது இடம் வேண்டும் என்று அவர் நயந்து கேட்டார். அவ்வாறே அவன் இரங்கிக் கொடுத் தான். கொடுக்கவே அத் துறைமுகத்தை படைந்து தங்கள் வர்த்தக நிலைக்கு வசதியாகச் சிறிய கோட்டை ஒன்று கட்டினர். அவரோடு வியாபாரம் செய்யும் நிமித்தம் அக் கோட்டையைச் சுற்றிச் சிலர் வந்து குடியேறினர். அந்த ஊருக்கு அம்மன்னன் பெயரால் சென்னப்பனுர் என்று பெயரிட்டார். முன்னம் சின்ன நிலையில் இருந்தது; பின்னை அது சென்னை ஆயது.

சென்னை சேர்ந்தது.

அதுவே பின்னளில் சென்ன பட்டணம் எனத் திரிந்து இதுபொழுது நமது தேசத்துக்குச் சிறந்த இராசதானியாய்ச் சீரும் பேரும் பெற்றுச் சிறப்போடு விளங்கி நிற்கின்றது. அங்கு முதலில் தங்கியிருந்த அவ் வர்த்தகக் கூட்டத்தார் வணிக முறையை துணுகி ஆராய்ந்து, இந் நாட்டிலுள்ள உப்பு மிளகு முதலியவற்றைத் கம் காட்டுக்கு அனுப்பி, அங்குள்ளவற்றை வரவழைத்து இங்கு விற்றுப், பண்டம் மாற்றுகளைக் கண்ட இடங்களிலெல்லாம் கருதிச்செய்து பெரும் பொருள் திரட்டி னர். திரண்ட செல்வம் வரவே ஆங்காங்குச் சில நிலங்களை வாங்கினர். அவ் வமயம் இத்தேச முழுவதையும் ஆண்டிருந்த கபாவுகளுக்கும் கடன் கொடுத்தனர். அம் மகமதிய மன்னர் ஒருவரோடு ஒருவர் கலகம் விளைத்து நின்றமையால் நாளடை