பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 5. கும்பினி சார்ந்தது 73

ஆ ல ன் வ ங் த து.

இவ்வாறு வந்ததில் ஆண்டுகள் ஆறு கழிந்தன. கி. பி. 1792ல் இந்நாட்டு உரிமையை சபாவிடம் பெற்று வந்தவர் 1798 வரையும் இவரிடம் வரியைக் கேட்டுக்கேட்டு வந்தார். முடிவில் பெற்ருேம் என்ற பேருக்குச் "சிறிது வரியை உதவி வருக; அதல்ை பிறரும் அடங்கி கடப்பர்; எங்கள் உரிமைக்கும் பெருமையாம்' என உறவுரிமை கூறித் திறையை உறுதிசெய்து வரும்படி ஆலன் என்னும் துரையை இவ் அரசிடம் விடுத்தார். அவர் கல்ல அறிவாளி; அமைதி யுடையவர்; இந் நாட்டு வழக் கத்தை நன்கு அறிந்தவர்; தெலுங்கும், தமிழும் சிறிது பேசத் தெரிந்தவர். திருநெல்வேலியிலிருந்து பரிமீதிவர்ந்து பாஞ்சையை நோக்கி வந்து தெற்கு வாசலை யடைந்து வாசியை விட்டிறங்கித் கேசுடைய அங்ககரை ஆசையுடன் நோக்கினர். அதன் அழகு அமைதிகளைக் கண்டு உளம் மிக வியந்தார். பின்பு வாசலைஅணுகி னர். அங்கே வாள், வேல், வல்லையம் முதலிய ஆயுதங்களைக் கையிலேந்தி யாரும் அஞ்சும் வகையில் காவல் செய்து கிற்கும் வீரர்களைக் கண்டார். * காகம் பறவாது கட்டபொம்மு கோட் டையின் மேல்” என்று இக் காட்டில் வழங்கும் மொழியினை முன்னம் கேட்டு கின்றேன்; இன்று நேரே அதன் மகிமையைக் கண்டறிந்தேன் என அவர் கருதிப் புகழ்ந்து அருகில் நெருங் கித் தாம் வந்துள்ள விவரத்தை அரசிடம் உரைக்கும்படி இத மாக வேண்டினர். அல்லும் பகலும் மல்லினையே அவாவிக் காப்பாளராய்க் கடுத்து நின்ற அவ் வல் வீரர் அவரை 'அங்கே நில்லும்” என்று நிறுத்தி உள்ளேபுகுந்து அடுத்த வாசம் காவல ரிடம் அறிவித்தார்; அம்முறையே சென்று இறுதியில் வந்து அவ் வெள்ளையரது வரவு நிலையை இவ் வள்ளலிடம் வணங்கி யுரைத்தார். உடனே யார் அது? அழைத்து வருக' என்று அயலே கின்ற சின்னபொம்மு நாயக்கரை மன்னவர் விடுத்தார்.

  • பறவைகளும், விலங்குகளும் கடடக் கட்டபொம்முடைய

ஆணேயைக் கடவாமல் அஞ்சி கிற்கும் என்பது இதல்ை அறியலாகும்.

10 幫