பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

வாங்க வந்தவனது உயிரைவாங்கினன் என்னும் வன் பழிக்கு அஞ்சி நான் இதுவரை பொறுத்திருக்தேன்; கருத்து அறிந்திலே, இனி யாதும் இங்கு மறுத்து மொழியற்க; இக்க இடத்தின் இயல்பை எண்ணி புணர்ந்திலை; பின்னமாக இன்னம் யாதும் பிதற்றேல்; உன்னை விடுத்தவரிடம் போய் யான் உன்னிடம் இங்கே உரைக்கவற்றை உணர்த்துக; சொன்னதைச் சொல்வ கே உன்னது வேலை; உடனே செல்க' என இவர் உரைத்து விடுத்தார். அவன் மறுத்து ஒன்றும் பேசாமல் வருக்கமாய் எழுத்தான்; அரசு கடுக்கமையால் இடையே ஆபத்து நேரு மோ? என அவன் அஞ்சி கின்ருன். அந் நிலையின நோக்கிப் :பரிவாரங்கள் யாதொரு துேம் இவருக்குச் செய்து விடாதபடி கையுடன் அழைத்துப் போய் இவரைக் கருத்துடன் அனுப்பி வருக”என வீரர் இருவரை ஈரமுடன் அனுப்பி இவ்வீரரிருந்தார். அவன் வெளியில்வந்து பரியில் ஏறி விரைந்துசென்று நெல்லையை அடைந்து அங்கு உள்ள அதிபரிடம் இவர் சொல்லிய யாவும், உள்ள நிலையும், உணர்த்தி நின்ருன். அவர் உணர்ந்து திகைத தார். உள்ளங்கொதித்தார்; உறுவதை ஆய்ந்தார்; ஒருங்கு கூடி ஒர்ந்து சூழ்ந்து மேலுள்ள கும்பினித் தலைவர்க்கு இங்கு இவர் வணங்கா முடியராய் இனங்காதிருப்பதை எழுதி விடுத்துக் தங்கள் நிலைமைக்குப் பழுது வந்து விடுமோ? என்று பயந்து, மேலிருந்து வருகின்ற உத்தரவை எதிர்பார்த்து உளம் மறுகி யிருந்தார். அவரது இருப்பு அவல நிலையில் கவலை கோப்ந்து நின்றது.

வெள்ளேத் துரைநேரே விரத் துரையிடம்

வேண்டி வரியினேக் கேட்க வந்தான் உள்ளம் கலங்கியே சொல்லாமல் ஒடிப்போய்

ஒல்லையில் நெல்லையைக் கூடிகின்ருன். ஆலன் வந்து போன நிலையை இச் சிந்து காட்டியுள்ளது.