பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ. மு. வ அது அ தி கா ர ம்

மந்திரா லோசனை.

==

வரியை கினேந்த வாஞ்சையோடு வந்து முன் பாஞ்சையை அடைந்த ஆலன்துரை அலமந்து போனபின் இவ் அரசர் உரிய அறிஞரை ஒருங்கு கூட்டி உற்ற நிலையைக் குறித்து உறுதி சூழலானர். கமது கம்பியரும், தானுதிபதிகளும், சிறிய கங்கை யாரும், மாமனரும் மைத்தனமா ரும், மதியுடை முதியோர் களும் அவையிடை யடைந்தார். அடையவே இவ் அதிபதி வந்து ஆகனத்து அமர்க்க புதிதாய் நேர்ந்துள்ள வரி கிலேயைக் குறித்து உரியராய் நெருங்கிய அவ் அறிவுடையாரிடம் முறையுடன் விளக்கித் தெளிவு கொள விழைந்து உறுதி பெற வுரைத்தார்.

மன்னன் முன்னுரை.

கம் முன்னேர் முதல் பன்னருஞ் சிறப்புடன் இந் நகரி விருந்து இன்னருள் புரிந்து நன்னயமாகக் குடிகளே இனிது பேணி முறைபுரிந்து வருகின்ருேம். வரி என்று இதுவரை யாதும் யார்க்கும் கந்திலம். .ே ம பாளையகாரர்களிடம் திறைகளை வாங்கி நபாவுடன் நண்பாற்றி வந்துளோம். அப் பழமையை ஒரு சிறிதும் உணராமல் புதியாய் வந்தவர் வரி என மண்டி நம்முடன் வம்பாடி வருகின்ருர். ஆண்டுகள் ஆருக அகற்றி விடுத்தும் மீண்டும் மீண்டும் வந்து வேண்டி நிற்கின்ருர். ஒரு முறை வரி என உதவி விடின் பின்பு வருகிற வழிமுறை எல் லாம் வணங்கி வாழ வரும். கரு வருபோதிலே களையலாவிடின் உரு வருபோதிலே உளைய நேரும். வரி என்னும் பேரால் வங் துள்ள இது நம் உரிமையைக் குறைக்கவும், பெருமையைக் குலைக்கவும், சிறுமையை விளைக்கவும் மருவியதாகவே நான் கருதுகின்றேன். வருவது ஒன்றும் சரியாக இல்லை. இந் நிலையில் நாம் நடந்து கொள்ள வேண்டிய வழி என்ன? நாடி ஆராய்ந்து நன்கு சூழ்ந்து இங்கே கூடியுள்ள நீங்கள் குறித்துச் சொல் லுங்கள் என்று எடுத்துச் சொல்லி இவர் எதிர்நோக்கியிருந்தார்.