பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

சிவசுப்பிரமணியபிள்ளை பேசியது. மந்திரிப்பிள்ளை முந்துற எழுந்து மன்னன் முகம் நோக்கிப் பேச லாயினர். 'விரவள்ளலே இதுவரை அங்கிருந்து உத்தரவானவை யாவும் அறிந்தேன். வெள்ளைக்காரர் வந்தநாள் முதல் நாட்டில் சமக்கு வரும் வருவாய் குன்றியது. திசை காவலுக்கும், கலம் காவலுக்கும் கூட வரிகள் சரியாக வசூலாக வில்லை. நமது ஜமீன் குடிகளைக் தவிர அயலிலுள்ள குடிகளிட மெல்லாம் நொடி சொல்லி கமக்கு வரிகாாவகை இடர்செய்து வருகின் ருர், சபாவிடமிருந்து தாம் நேரே ஆட்சியைக் கொண்டுள்ள காக மாட்சிகள் கொண்டாடுகின்ருர். நாட்டில் பலரைக் கலைத்து உளவறிந்து கம்பக்கம் அநுகூலமாகக் கூட்டிக் கொண்டார். பிரித்தாளுவதில் கருத்துான்றியுள்ளார். முதலில் வந்த தொடக்கத்தில் இங்குக் கொஞ்சம் அஞ்சி நின்றனர்; வரவர மிஞ்சுகின்ருர். இக்காட்டு மக்களைக் காட்டுமாக்களாகக் கருதி நின்று தமக்கு உறுதி காண்கின்ருர். வெளிகாட்டிலிருந்து இங்கு வந்து வந்து மிகவும் களியாட்டம் கொள்கின்ருர். உலகமுழுவதும் தனித்தலைமை கொண்டு தழைத்தாள ஒர்ந்து உழைத்தோங்கி வருகின்ருர். சங்கம் சேர்ந்தோம்; வங்கம் பெற்ருேம்; கலிங்கம் கொண்டோம்; தெலுங்கம் அடைந்தோம்; மராடம் வந்தது; விராடம் சேர்ந்தது; இனி எங்கும் கங்கொடி எளிது காட்டி, இக்காட்டை இனிது ஆளலாம் எனக்களிமிகுந்து அங்கங்கே ஆரவாரம் செய்கின்ருர்; இங்கு ஒர் சிங்கம் உள்ளது என்று தெரியாமல் இங்வனம் அவர் பொங்கி நீள்கின்ருர். இவ் அரசின் வரன் முறையை அறிந்து ஒதுங்காமல் வரிகொள விரைகின்ருர் கனவிலும் கனவிலும் வரவையே கருதுகின்ருர். அவர்க்கு இன்று சிறிது இடங்கொடுத்தர்ல் பின்னர்ப் பெரிதும் இடரும். ஈர்க்கு இடைபுகாமலே இருக்கதாயினும், நீர்க்கு இடம் விடின் அது கெடிது பாயும் ஆகலால் பார்க்குள்ளே தலைமையில் பதிந்திருக்கின்ற நாம் யார்க்குமே வரிகருகல் கூடாது. பள்ளம் கண்ட இடத்தில் வெள்ளம் பாய்வதுபோல