பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

புதியர் என்று எளிதாக கினைந்து இகல்மீக்கொண்டு எதிர்த்து கின்ருல் அவர் பகை மீக்கொள்வர். அதனல் படுதுயராகும். நடுவு நிலைமையாய் காடி ஆராய்ந்து நயத்தகு முறையில் அவ் அதிபதிகளோடு இதுபொழுது நாம் நடந்து கொள்வதே நல மாம், யாண்டும் முரண்கொள்ளலாகாது” என உரங்கொண்டு உணரும்படி உரிமையோடு உரைத்தார். மனநலமும் மதிநலமும் உடைய அவர் இனமாக இனிது மொழிந்தது தெளிவமைந்து ஒளி புரிந்து நின்றது. அதன்பின் கானைத் தலைவன் எழுந்தான். ரணசிங்கன் மொழிந்தது. 'அரசே! என் உள்ளம் அறிந்ததை நான் இங்கு உரைக்கின்றேன். வெள்ளையர் வரவால் நம் அரசில் எள்ளல் வர நேர்ந்தது. வாணிகம் செய்து வருபொருள் பெருக்கி, மதி மயங்கி நின்ற மகமதியரிடம் அவனியைக் கவர்ந்து ஆணைசெய்ய வந்தார். உப்பும் மிளகும் விற்று கின்றவர் உலகாள வங்கமையால் தலைமையான இவ் அரசின் கிலைமை தெரியாமல் கப்பம் என்று மெல்ல அப்ப சேர்ந்தனர். சுத்த வீரனுக்கே உலகம் உரியது என்னும் உண்மை ஒழிந்து போயது. ஒரு முறையும் இல்லை. தோன்றின பேரெல்லாம் துரைகள் ஆயினர். திறை திறை என்று பறையறை கின்றனர். நம் வழியில் இல்லாத வரி எனும் இழிவை ஒழிவு செய்யவேண்டும். ஊரும்போதே துடைத்து ஒழியாவிடின் பின்பு இடையூறுகள் மீறியேறி எ ன் அறு ம் வெங் துயர் விளக்கும். இன்று ஒரு வரி என இசையின் நாளே ஒரு வரி, காளே கின்று ஒருவரி, அதன்பின் ஒரு வரி அயலே ஒரு வரி என மயலே மிகுந்து பொருள் வரவில் ஆசை நீள வளர்ந்து ஆளடிமை யாக்கி மாளும் வகை செய்வர். நாம் வளர்த்து சம் கொல்லையில் கட்டுள்ள மாமரத்திலும் பங்கு என வந்து பாமரப் பறியாகப் பறித்து அவர் காமுறும் வரி கானும் தரத்தவோ? இனி சாம் சும்மா இருக்கலாகாது; இவ்விடத்தின் அருச் திறலேயும் பெருந்தகவையும் அறவே மறந்தார்; முன்னம் இருந்த மன்னவர் போல் நம்மிடம் அவர் உரிமைகொண்டிருப்பின்