பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

மீக்கொண்டு, பழுகே பொழுது போக்கும் இழுகை நீரர் இங்கு இழிந்து கின்ருர், அல்லும் பகலும் அயராது முயன்ற அவர் உயர்ந்து வந்தார். பொருள் வரின் எல்லாம் வரும் ஆகலால் இத்தேச ஆட்சியும் அவர் வசம் சேர வந்தது. முயன்றவர் உயர்ந்தார்; அயர்ந்தவர் இழிந்தார்; என்னும் முதுமொழிப்படி அவர் முதன்மை எய்தி நின்று கில வுரிமையும் அடைந்தார். அடையவே மேலும் தம் இனத்தார் இங்கு வரும்படிக்கான வரும்படியை வளர்த்துப் பெரும்பொருள் திரட்ட விழைந்து குடிக ளிடமும் குறுநில மன்னர்க ளிடமும் வரிகளை விதித்தார். அக்க முறையில் இந்த இடத்தையும் அடைந்தார். முந்தை நாள் முதல் நமக் கிருந்துவரும் சொந்த முதன்மையைப் புதியராய் வக்க அவர் அறியார் ஆதலால் திறை என நெருங்கி மிறை செய கேர்த்தார். உரிய உண்மையை யுணர்த்தி வரியை நீக்கச் செய்து அவரோடு நட்பாப் உடன்பட்டு வாழ்தலே இப்பொழுது நமக்கு உறுதியான கடமையாகும். மாறுபாடு கொண்டு மண்டி கின்ருல் அகளுல் ஊறுபாடுகள் விளையும்; இகலை எதிர் வளர்க்காமல் அயல் ஒதுக்கி ஒழுகலே எவ்வழியும் நலமாம்.

  • இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்; அதனை

மிகலுக்கின் ஊக்குமாம் கேடு. (குறள்)

என்பது பொய்யாமொழி. சமுகம் சுமுகமாக இகல் ஒழிந்து, நகல் புரிந்து, புதியராய் அடைந்த அவருடன் பழமை பாராட்டி அன்புரையாடி அகத்திருக்தி அமைதியுற வேண்டும்; அதுவே இதுபொழுது நாம் செய்யத்தக்கது என இகமாய் நின்று அம்மதிமான் பகமாக உரையாடினன். இவ்வாறு அவ் அவையி லிருக்க அறிஞர் பலரும் தக்கம் எண்ணங்களை மன்னனிடம் சுவையுறச் சொல்வி முடிக்கார்; முடிக்கவே முடிவில் இவர் முடிவுரை கூறினர். அவ்வுரைகள் அரசு நிலையை விளக்கின.

  • குறள் 858. இகல்-மாறுபாடு. அஃதாவது ஒருவர் மேல் சினம்மீறி மனமாறி கிற்றல். இப்பகை நிலையை உள்ளுங்க் கொள்ளா மல் பராமுகமாய்த் தள்ளிவிடின் அல்லல் யாதுமின்றி எல்லா கலங் களும் இனிதமைக் திருக்கும் ஆதலால் ‘இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம்' என்றர். எதிர்சாய்தல்-நேரே மார் ஏற்காமல் வேருெரு வழியில் விலகி கிற்றல். சாயின் ஆக்கம், ஊக்கின் கேடு என்றது அதன் சாதக பாதகங்களே ஆதரவோடுநோக்கிஅமைதிகொள்ள என்க்.