பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாவது அதிகாரம் கும்பினித் தலைவர் கூடி ஆய்ந்தது.

இங்கு இவர் இவ்வாறிருக்க அங்குச் சங்கத் தலைவர்கள் குழ்க்து ஆய்ந்தபடியை இனிச் சார்ந்து காண்பாம். முன்பு வந்த ஆலன் அலமந்து போனபின் நெல்லை அதிகாரி இவர் திறை தர மறுத்த நிலைமையைக் குறித்து மேலுள்ளவர்களுக்கு விவரமாக எழுதிவிடுத்தான். அந்த எழுத்து வரவும் அதனை அவர் மிகவும் அழுத்தமாகப் பார்த்தார். அறிந்து உளைந்தார். ஆலோசனைகள் செய்தார். உடனே அங்கிருந்தவ ரனவரும் ஒருங்குகூடி உ சா வி ஆராய்ந்தார். அப்பொழுது சங்க ஆட்சிக்குத் தலைவராய் (Governer in Council) அங்கு இருந்தவர் Qluui arloeu#® (Edward Saunders). sßáv68ub olol # (William Petrie), @řaßgör (Irwin), Gagrarsi Galų (Joseph Webb) முதலிய துரைகள் பலர் காரிய நிர்வாகிகளாய் விரிய மோடு அவண் விளங்கி யிருந்தனர். அவ் எல்லாரும் ஒல்லையில் சேர்ந்து இவ் வல்லவன் புரிந்த வரி மறுப்பைப் பற்றி உறுதி யுரையாடி ஒருமுகமா யோசித்தார். அங்கனம் யோசிக்குங்கால் அனிமிசன் (Anemison) என்பவன் முதலில் எழுந்து இதமொடு பேசினன். அவனுடைய வார்க்கைகள் வரன்முறையாய்வந்தன.

அனிமிசன் உரை.

நாம் அரிய பெரிய முயற்சியால் இக் தேச வுரிமையை அடைந்திருக்கின்ருேம். குடிகளும் ஜமீன்தார்களும் வரிகளைச் செலுத்திப் படிகடவாமல் பணிந்து வருகின்ருர். நாட்டிலுள்ளவ ரெவரும் காம் இட்ட கட்டளைகளை மீருமல் கம் ஆணைக்குக் கட்டுப்பட்டு இருக்கின்ருர். இக் கட்டபொம்மு மட்டும் விதித்த திறையைச் செலுத்தாமலும், மேலும் நம்மை அவமதித்துக் கதித்த நிற்கின்றன். வெள்ளையர்கள் என்ருல் மிகவும் எள்ளல். செய்கின்ருன். கமக்கு உரிமையான கிராமங்களில் வலிந்து