பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கும்பினித் தலைவர் கூடி ஆய்ந்தது 85

புகுந்து கனக்கே வரி செலுத்தி வரும்படியும், திசையின் காவ அக்குப் பணம் தரும்படியும் தன் படைகளை எவிக் குடிகளைப் படாதபாடுகள் படுத்துகின்ருன். தன் காட்டின் அருகேயுள்ள எட்டப்பன் என்னும் பாளையகாரனுக்கு இடையூறுகள் பல செய்கின்ருன் என இவனைக் குறித்து நாளும் அவன் வருக்தி எழுதி நமக்கு அனுப்பி வருகின்ற விண்ணப்பக் கட்டுகள் எண்ண முடியாதபடி இங்கு கண்ணியுள்ளன. அவன் நம்மையே கம்பி கிற்கின்றன். அவனது பாளையமாகிய எட்டையாபுரத்தை இக் கட்டபொம்மு எப்பொழுது வந்து பறித்துக் கொள்வானே என்று நெடுக்திகில் கொண்டிருந்தவன் நமது ஆணைக்குள் ஒதுங்கி அடைக்கலம் புகுந்தபின் சிறிது ஆறுதலுற்றிருப்பதாக வும், இவனே உடனே அடக்கி ஒடுக்காவிடின் தென்னுட்டிலும் மற்று எங்காட்டிலும் கம் ஆட்சி செல்லாதெனவும், நம்மை மிகவும் எள்ளி கின்று இவன் இயற்றிவரும் அல்லல்கள் சொல்வி முடியா எனவும் அடிக்கடி அவன் சொல்லி வருகின்ருன். இன்று இவனை எளிதாக விட்டுவிடின் நாளை எவரும் நமக்கு வரி தர மறுத்து விடுவர். அத்துடன் வலியிலர் என நம்மை மெலிதாக வும் எண்ணி யிகழ்வர்; அதனல் இழிவு மீக்கூர்ந்து நாம் ஒழிவுற நேரும். ஆதிமுதல் யாருக்கும் இவன் வரி செலுத்தி வரவில்லை யாயினும் அதனை கம்மிடம் கேரில் வந்து நயந்து சொல்லி நட்பு. டன் அமைந்தால் தென்னுட்டில் திறை வகுவித்து அனுப்பும் பொறுப்பை இவனிடம் காட்டிப் பழமை போல் தன்னுட்டில் தலைமையோடு இவனே இருந்து வரச் செய்யலாம். இவன் اتاتی تھی۔ வும் செப்திலன்; யாரையும் மதியாமல் ஆண்மை மீறி விரமே கருதி வீறுகொண்டு கிற்கின்ருன். இவனே விரைந்து அடக்கினல் அன்றி கம் ஆட்சி சிறந்து கில்லாது. அதற்கு ஆவனவற்றை இன்றே சாம் ஆற்ற வேண்டும்; இனித் தாமதித்திருப்பது நன்ருகாது எனத் தன்னுள் ஒன்றியிருந்த கருத்தை உறுதி பெற அவன் உரைத்து கின்ருன். கிற்கவே இர்வின் எழுந்தான்.