பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

இர்வின் இசைத்தது.

இவன் நல்ல அறிவுடையவன். எதையும் ஆழ்ந்து சிந்திக் கும் அமைதியாளன். அனிமிசன் உரைத்தவற்றைக் கூர்ந்து கவனித்துத் தன் கருத்தைச் சுருக்கியுரைத்தான். நமக்குத் திறை செலுத்த மறுத்து நிற்கும் கட்டபொம்மைக் குறித்து நண்பர் உரைக்கவை யாவும் நன்கு கவனிக்கத் தக்கன. உள் நாட்டி லிருந்து அவன்மேல் வரும் புகார்களை ஒரு பொருளாக நாம் கம்பலாகாது. பொருமையினால் அவை வரவும் கூடும். வலியரை மெலியரும், செல்வரை வறியரும், அறிஞரை அறிவிலிகளும், சாதுக்களைத் தட்டர்களும் தம்முள் எள்ளி யிகழ்தல் இயல்பு. ஒத்த தன்மையின்மையால் சிக்கம் திரிந்து இங்கனம் சிறுமை பல பேசுவர். வீரர்கள் யாண்டும் புறங்கூரும். வஞ்சகம் தெரி யார். கோழைகளே கோளும் குண்டணியும் நாளும் செய்து கயந்து திரிவார். நான் இதுவரை தீரவிசாரித்ததில் கட்டபொம்மு கல்ல வீரன் என்றே தெரிகிறது. வீரர்கள் விரைந்து வந்து எவ ரையும் வியந்து கயவார். செல்வம் கல்வி முதலியவற்ருல் உண் டாகும் செருக்கினும் விர ச்செருக்கு மிகவும் வீறுடையது. புதியராய் வந்துள்ள நம்மை அவன் மதியாதிருப்பதும் ஓர் புதுமையன்று; மனித இயல்பே. நமது உரிமையையும் ஆற்றலை யும் அறியும்படி இனிய முறையில் உணர்த்தி அவனே உரியவளுக அனைத்துக் கொள்ளுதலே நமக்கு நல்ல உறுதியாம். வீரனுடைய துணை எக்காலத்திலும் பேருதவியாகும். நாம் உரிமையாக இப் பொழுது ஆகரித்து நின்ருல் நாளடைவில் வரியையும் செலுத்தி என்.றம் கம்பால் பிரியமுள்ளவனுக அவன் பேணி வருவான். இகலை வளர்க்காமல் தகவுடையாரை அனுப்பி அவனே வகையுற வணக்கி வசஞ்செய்து கொள்ளலே இனிய முறை. துணிமிகச் செய்யின் தொல்லைகள் வளரும்; அல்லல்களை யாண்டும் வளர்க் கலாகாது. கல்லதை நாடிச் செய்ய வேண்டும் என்று அவன் கலமும் உரைத்தான். அவனுடைய சொற்களில் நம் கருத்துகள் பல பதிந்து விற்பனமா யிருந்தமையால் எல்லாரும் வியந்து