பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஜாக்சன் சந்திப்பு 95

அதன்பின் ஊமைத்துரை ஒன்றும் சொல்லாமல் நல்லது என்று இருந்தார். கருதிய இடத்திற்குச் சென்றுவர அரசு உறுதி கொண்டு முடிவு செய்த பின் அனைவரும் ஒருமுகமாய் உவந்து ஊக்கிகின்ருர். வெள்ளைத்துரையை நேரில் கான விரத்துரை

மனம் இசைக்துள்ளமை ஊர் எங்கனும் தெரிய நின்றது.

ஜாக்சனைக் கண்டுவர எழுந்தது.

நல்ல நாளில் நெல்லை செல்ல மன்னன் நேர்க்கபின் பிரயா ணத்துக்கு வேண்டிய எ ல்லா ஆயக்கங்களையும் காரிய நிர்வாகி கள் கருதிச் செய்தனர். பரிவாரங்களுடன் பலவகை உபகரணங் களும் நிலைபெற நேர்ந்தன. ஒரு வெள்ளைத் துரையைக் கண்டு வரும்படி தங்கள் துரை புதுமையாய்ப் புறப்படும் அதிசய நிலையை அறிந்ததும் படைகள் அடைவுடன் கிரண்டன. வேலா ளர், வாளாளர், வில்லாளர் முதலாக காலாயிர வீரர்கள் எழுந்த னர். நல்ல நேரம் நாடி அரசு எழுந்து சிறந்த பச்சைப்பல்லக்கில் ஏறவும், கம்பிமார் மைத்தனமார் தாகுதிபதி முதலிய உரிமை யாளர் யாவரும் உயர்ந்த பரிகளில் ஏறினர். முன்னும் பின்னும் படைகள் தொடர்ந்து அடலுடன் செல்லப், பல்லியம்முழங்கக், காளம் ஊத, வழியிடை நீளக் கண்டவர் எவரும் கைகுவித்து நின்று மண்டலாதிபதியே! என வணங்கி வாழ்த்தத் தண்டிகை நடந்தது. அங்ஙனம் சென்ற காலம், கொல்லம் ஆண்டு கூஎச காலசுத்தி வருடம், ஆவணி மாதம், ஒன்பதாங் தெப்தி வியாழக் கிழமை, தசமி திதி என்க. இது கி. பி. (24–8–1798) ஆகும். இவர் பேட்டிக்கு வெளிவந்ததைக் கண்டு யாவரும் வியந்து கொண்டார். நாட்டுமக்கள் உவந்து நோக்கி உள்ளம் களித்தார்.

பொருபடைகள் புடைசூழ்ந்து வர, அரிய காட்சிகளும் பெரிய மாட்சிகளும் வழியெங்கனும் திகழப் போடம்பரங்க ளோடு எழுந்து இவ்விர மன்னர் திருநெல்வேலியை அடைந்தார். அங்கு ஜாக்சன் இல்லை. காவு நிலையில் அவன் அயல் அகன்ருன்.