பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் நன்று கன்றுதும் வஞ்சமும் ஆசையும் காட்டில் ஒன்றி கின்று பின் உயிர்களே உறிஞ்சிட உற்றீர்! இன்று உமக்கிறை இாங்கியிங்கு இடங்கொடுத் தேனேல் என்று மே துயர் எங்கணும் இழிவுடன் எழுமே. [9] ஏழை மக்களுக்கு இரங்கிமுன் ஈவதே அல்லால் பிழை யாய்வங்து பிழைபல செய்துமே லாளாய் வாழ எண்ணியே வஞ்சமாய் வங்துள துமக்கோர் கூழும் தங்கிடேம் உறுதியிது என்றுநேர் குறித்தான். [10] (வீரபாண்டியம்) இவ்வுரைகளால் இவருடைய மனவலியும் மதிநலமும் மரபின் கீர்மையும் தெய்வபக்தியும் தேசாபிமானமும் ரே கைரியமும் கருமச் சூழ்ச்சியும் தரும நோக்கமும் உறுதிநிலையும் ஒருவாறு அறியலாகும். கருதியுணரும் அளவு உண்மைகள் தெரிகின்றன. உள்ள உணர்ச்சிகள் உரைகளில் வெளிவருகின்றன. உயர்ந்த மானிகள், சிறந்த போர்வீரர்கள், தேர்ந்த ஞானி கள் என்னும் இவர்களுடைய செயல் இயல்கள் எல்லாம் எவ ரும் வியக்க நோக்கும் வகையில் யாண்டும் விரிந்து நிற்கின்றன. பொதுமக்களுக்கு இம்மு தமக்கள் வழிகாட்டிகளாய் ஒளிநீட்டி கிற்கின்றனர். மான வீரங்கள் மகிமை நிலைகளாய் மருவி வருகின்றன. அரிய ஆன்மகிலே இனிய பான்மையால்மிளிர்கிறது. மனவுறுதியாலும் மதிநலத்தாலும் மனிதன் தனி நிலையில் உயர்கின்ருன்..அவ்வுயர்ச்சியை வெளிமுயற்சியால் அடையமுடி யாது. உள்ளத்தின் தகுதியால் அடைய நேர்கின்றது. உள்ளம் உயர எல்லா உயர்வுகளும் தாமாகவே அமைகின்றன. ஊக்கம் உடையவரதுபோக்கும் நோக்கும் வியப்பும் விம்மிகமும் வினைத்து வருகின்றன. மனித சாதி அவர்களால் மாண்பு மிகப் பெறு கின்றது. புனித வாழ்வை அவர் போற்றி ஒழுகுகின்றனர். வீர சுதந்திரம் எல்லாரும் அஞ்சி வணங்கி அடங்கி ஒடுங்கும்படி அதிகார ஆற்றல்களை எங்கும் பரப்பி விதிமுறைகளை விரித்த யாண்டும் அதிபதிகளாப் வீ.) கொண்டு கிற்கின்ற கும்பினியாரோடு எதிர்த்த இவர் கிறை தர மறுத்த திறம் பெரிய வியப்பாய்ப் பெருகி அரிய பல ரேங்களை உலகம் அறிய விளக்கி நின்றது.