பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் திறவினர்; வாள்வலியில் சிறந்தவர். இறக்கபோனபின் எவரை யும் உயர்ந்தவராகப் புகழ்ந்து கூறுவது உலக வழக்கம் ஆயினும் அது இவர் அளவில் விலக்காயுள்ளது. உயிர்வாழ்ந்திருந்தபோது உயர் விரத்தில் புகழ்கூர்ந்த நின்றதுபோல் உருவம் மறைக்கபின் பும் இவர் ஒளி மிகுந்துள்ளார். அம்மானே கும்பி முதலிய காட் டுப் பாட்டுகளிலும் தெருக்கூத்துகளிலும் இவர் சரிதம் சேர்ந்து கிற்றலால் சிறந்த நிலையில் உயர்ந்து கோன்றவில்லை. ஆயினும் பொதுமக்கள் அதிசய ஆர்வத்தோடு யாண்டும் இந்த ஆண்ட கையை உவந்த போற்றிப் புகழ்ந்த வியங் து வருகின்றனர். ஊமைத் துரை என்னும் பேரைச் சொன்னல் அங்கே சிமைத் துரைகள் எல்லாம் நடுங்கிச் சேமத்தை காடியே தென்திசை நோக்காமல் சித்தம் கலங்குவர் மெத்தவுமே. (1) செந்தமிழ் நாட்டில் பிறந்தாலும் இவன் சீர்த்தி உலகம எல்லாம் பரந்து அந்தரம் எங்கும் முழங்கி வருதலால் யாரிவன் ஆண்மை அளவிடுவார்? (2) மோழை எருதுகள் போல இங்காட்டுள்ள பாளேய காரர்எல் லாம்பனிங்தே ஏழைகள் ஆக இழிந்துகின்ருர் இவன் ஏறுபோல் சீறி எதிர்எழுந்தான். (3) நூறுக்கிருந்தாலும் ஆறுக்குள் மாய்ந்தாலும் போருக்குள் மாய்வதை யேவிழைந்து பாருக்குள் பாஞ்சையில் வாஞ்சையாய் வந்தவன் பேருக்கொருவனுய்ப் பேச கின்ருன். (4) தென்னுட்டுச் சிங்கம் என்று எங்காட்டும் பேர்காட்டித் திக்கு விசயங்கள் செய்துவந்தான் இந்நாட்டுள் வெள்ளேயர் ஏறி வராமலே ஏறுபோல் சீறி எதிர்த்து கின்ருன். (5) தேச சுதந்திரம் இல்லை.என்ருல் அது சேகிலே என நெஞ்சில் எண்ணி வாசம் பெறவந்த வஞ்சரை அஞ்சாமல் வாட்டி எதிர்மாட்டி ஒட்டநேர்ந்தான். (6)