பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாவது அதிகாரம். அரசு அமர்ந்தது. -כי-r:Cםלכים புதிதாக அரண்களே அமைத்து விதிகளைச் செப்பம் செய்து விதி முறைகளே வகுத்த அதிபதி அழகு செய்யவே நகரம் பழமை போல் எழில் மிகுந்து விளங்கியது. கலைமகனைக் கண்ட குலமகள் போல் ஊமைத்துரை வரவும் ஊர் ஒளி சிறந்து உள் ளது என நாட்டு மக்கள் எல்லாரும் உள்ளம் உவந்து உரிமை கூர்ந்து நின்ருர். வி.ரமாபுரி என யாண்டும் ஆர்வமோடு பேரும் ருேம் பெற்றிருந்த பாஞ்சாலங்குறிச்சி சிறிது காலம் கிலைகுலைந்து கிடந்தத; மீண்டும் தலைமையோ டு பொலிவடைந்த கின்றது. அங்கிலே பலர்க்கும் மகிழ்ச்சி வியப்புகளை விளைத்து வந்தது. அயலூர்களிலிருந்த குடிசனங்கள் எல்லாரும் ஒர் அதிசயக் காட்சியாய்க் கோட்டையை வந்து பார்த்தக் கோனை உவந்து போயினர். மான விரன் என மதித் துப் புகழ்ந்து துதித்தனர். பதவி உதவியது. உறவின் முறையார் உரிமையுடன் அணுகி ஊமைத்துரை யைக் கண்டு உறுதி கிலேகளைக் கூறினர். மரபின் முறைப்படி அரசுரிமையை ஏற்றுப் பட்டங்கட்டிக் கொள்ளும்படி பரிந்து வேண்டினர். மாமன் முதலிய முதியவர்கள் வந்த அதிபதியாய் அமர்ந்து ஆவன செய்யுமாறு ஆவலோடு வேண்டவே இவர் அது வேண்டாம் என்று மறுத்தார். மீண்டும் அவர் வற்புறத்தி ர்ை. அப்பொழுக தன் உள்ளக் கிடக்கையை எல்லாரும் தெரி ந்த கொள்ளும்படி ஊமைத்துரை உறுதியா யுரைத்தார். நான் பட்டம் தரித்துப் பவுசுடன் இங்கு வாழ வரவில்லை; பகைவரைப் பாடழித்துப் பழிக்குப் பழி வாங்கி என் வழிக்கு நேர்ந்த வசையை ஒழிக்கவே வந்தேன் ' என இங்வனம் இவர் வெளிப்பட விளம் பினர். இவருடைய உள்ளத்தில் உறைந்துள்ள கொதிப்புகளும் மன வேதனைகளும் துயரங்களும் சொல்லுகளில் அடித்து வர் திருக்கின்றன. உலக வாழ்வு இவர்க்கு வெறுப்பாய் நின்றது. அண்ணனை இழந்தபின் மண்ணிலிருந்து நான் வாழவேண்டுமோ?