பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற காவிய மாந்தர்கள் 91. புத்தி விவேக மில்லாதவன்;-புலி போல உடல்வலி கொண்டவன்;-கரை தத்தி வழியும் செருக்கினால்-கள்ளின் சார்பின் றியேவெறி சான்றவன்;~அவ சக்தி வழிபற்றி நின்றவன்;-சிவ சக்தி நெறிஉண ராத வன்-இன்பம் நத்தி மறங்கள் இழைப்ப வன்;-என்றும் நல்லவர் கேண்மை விலக்கி னோன் அண்ண னொருவனை யன்றியே-புவி அத்தனைக் குந்தலை யாயினோம்-என்னும் எண்ணம் தனதிடைக் கொண்டவன்," இத்தகைய தீப் பண்புகளைக் கொண்டவன் அண்ணன் ஏது சொன்னாலும் மறுத்திடான். அவன் வெட்டிவிட்டு வா’ என்றால், இவன் கட்டிக் கொண்டே வந்து விடுவான். இந்த அருட் கண்ணழிவற்ற பாதகனை துரியோதனன் திரெளபதியை மன்றுக்கு அழைத்து வருமாறு ஏவுகின்றான் திரெளபதி யிருந்த மாளிகைக்கு வருகின்றான் இக் கொடியவன். அங்கு நீண்ட துயரில் குலைந்துபோய் நின்றி ருந்த நேரிழையைக் காண்கின்றான். அவள் தீண்டலை எண்ணி ஒதுங்கிநிற்க, இவன் அடி செல்வ தெங்கே? என்று இரைகின்றான். அவளும் துணிவாகவே பேசுகின்றாள்; ஆனால் மைத்துனன் என்று கருதி, மரியாதையுடன் 'தம்பி, நீ வந்த செய்தியை விரைவில் சொல்லி நீங்குக என்றே மொழிகின்றாள். அவன் பேசக் கற்றுக் கொண்ட மிருகம். மனிதப் பண்பு இழந்து இவ்வாறு பேசுகின்றான்: . பாண்டவர் தேவியுமல்லை நீ;-புகழ்ப் பாஞ்சாலத் தான்மகளல்லைநீ-புவி யாண்டருள் வேந்தர் தலைவனாம்-எங்கள் அண்ணனுக்கேயடிமைச்சி நீ; 4?. ഞു. 5, 6!: 264, 265, 266