பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

穿2 பாஞ்சாலி சபதம் ஆடி விலைப்பட்ட தாதிநீ;-உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோதனன்:-"மன்னர் கூடி யிருக்கும் சபையிலே-உன்னைக் கூட்டி வரு கென்று மன்னவன்-சொல்ல ஓடி வந்தேனிது செய்திகாண்;-இனி ஒன்றுஞ் சொலா தென்னோ டேகுவாய்-அந்தப் பேடி மகனொரு பாகன் பாற்-சொன்ன பேச்சுகள் வேண்டிலன் கேட்கவே." பாஞ்சாலியோ மீண்டும் அச்சா என்று விளித்து தான் மாத விலக்காக இருப்பதாகவும், தார்வேந்தர் பொற்சபைமுன் தன்னை அழைத்தல் மன்னர் குலத்து மரபு அன்று என்றும் கூறி அவனுடன் ஏக மறுக்கின்றாள். காண்டா மிருகம் போன்ற துச்சாதனச் சண்டாளன் 'கக்கக் க"வென்று நகைத்து காரிகையின் கூந்தவினைப் பற்றிக் கரகரவென்று இழுத்துச் செல்லுகின்றான். வழி நெடுக இருப்பவர் யாரும் இவனைத் தடுக்க வில்லை; அவையோரும் மூங்கையர்போல் வாளா இருக்கின்றனர். துச்சாதனன் உலகம் கேட்டிராத முறையில் அன்னையின் துகிலினை மன் றிடை உரிகின்றான். இவற்றால் துச்சாதனின் கயமையைப் புலப்படுத்துவர் கவிஞர். அ. கர்ணன் இவன் குந்தியின் முதல் மகன்; குந்தியின் திருமணம் ஆவதற்கு முன்னரே சூரியனைக் கலந்ததால் பிறந்தவன்; அவளால் பெட்டியில் வைக்கப்பெற் று ஆற்றில் விடப்பெற்றவன். திருதராட்டிரனின் தேர்ப்பாகனால் எடுத்து வளர்க்கப்பெற்றவன். இவனது வில்லாற்றலை நன்கு அறிந்த துரியோதனன் அருச்சுனனுக்கு நிகராவன் இவன் என்று இவனை நண்பனாக்கிக் கொண்டான். தேர்ப்பாகன் மகன் என்ற இழிசொல் நீங்கும்பொருட்டு இவனை அங்க حسسسسسسسسسسسسسسسسسسسسسس-------• 48 டிெ 5, 62 : 259-270