பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 பாஞ்சாலி சபதம் "மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கம்.கீழ் அடியார்க் கில்லை, சீரிய மகளு மல்லள்: ஐவரைக் கலந்த தேவி. யாரடா பணியாள்: வாராய்; பாண்டவர் மார்பிலேந்தும் சீரையும் களைவாய்; தையல் சேலையும் களைவாய்' என்கின்றான். மானமும் வீரமும் மதியும் இருந்தென்ன? போயென்ன? இவையெல்லாம் துட்டர்களின் நட்பால் மறைந்தன; சேர்ந்த இடத்தின் பண்பு ஆழமாய் பற்றிக் கொண்டு விடுகின்றது; - நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியலப தாகும் அறிவு." என்ற வள்ளுவத்திற்கு இலக்கியமாக அமைகின்றான் கர்ணன். அழுக்காறும்அவாவும் வெகுளியும் ஒன்று சேர்ந்து இன்னாச் சொல்லைஇயம்ப வைத்து விடுகின்றன. ஐவரையும் திரெளபதியையும் துகிலுரியுமாறு துரியோதனன் தம்பிக்குப் பணித்ததாக வில்லி கூறுவார். : திறமை, தகுதி, கொடையினால் மிகுபுகழ் இவையனைத் தும் பெற்றிருந்தும் பெருமிதப் பண்பு இவனிடம் இல்லை. தருமன் செல்வம், நாடு ஆகிய அனைத்தையும் இழந்து நிற்கும் நிலையில் சகுனி தருமனிடம் தம்பியரைப் பணயமாக வைத்து ஆடலாம் என்று கூறும்போது பரிவும் பச்சா தாபமும் மிக்க அவையினர் கண்களின் நீருதிர்க்க இவன் மட்டிலும் சிரிக்கின்றான். இச்செயல் இவனது நற்குணங். களையெல்லாம் அழித்து விடுகின்றது. 50. டிெ 5.69:290 51. குறள்-452