பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ பாஞ்சாவி சபதம் வாயால் கேட்கின்றார்? மன்னர்காள்,பொழுது போக்கிற்கும் மகிழ்ச்சிக்கும் சூது என்று வைத்துக் கொண்டாலும் மனுநீதி துறக்கவும் இரு விழிகள் பாவத்தைப் பார்க்கவும் ஒன்றும் பேசாது வாயடைத்துப் போனதன் காரணம்தான் என்ன? தாத்தனே, நீயாவது சொல். இப்படி நடைபெறுவதற்கு விட்டு வைப்பது தகுமா?" என்ற ஆவேசமான இவன் பேச்சைக் கேட்டதும் அவையில் ஒரு சிறு குழப்பம் ஏற்படு கின்றது. சில வேந்தர்கள் தம் இருக்கைகளிலிருந்து எழுகின்றனர்; சிலர் இரைச்சலிடுகின்றனர். ஒவ்வாது சகுனி செயும் கொடுமை என்கின்றார் சிலர்; இன்னும் சிலர், "எவ்வாறு புகைந்தாலும் புகைந்து போவீர்; ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டா செவ்வானம் படர்ந்தாற்போல் இரத்தம் பாயச் செருக்களத்தே தீருமடா பழிஇஃது: என்று உரைப்பர். ஆனால் இந்தக் கூச்சலும் குழப்பமும் எடு படவில்லை; எப்படியோ அடங்கிப் போகின்றது. கர்ணன் பேச்சு இதனை அடக்கி விடுகின்றது. க9. விடுமன் : திருதராட்டிரனின் அமைச்சரவையில் சிறந்து விளங்கும் ஓர் அமைச்சன். பாண்டவர்கட்கும் கெளர வர்கட்கும் பாட்டன். ஆரிய வீட்டுமன் என்றே இவனைக் கவிஞர் குறிப்பர். அவர் இவனை ‘அந்தமிழ் புகழுடையான் அந்த ஆரிய விட்டுமன் அறன் அறிந்தோன் என்று அறிமுகம் செய்து வைக்கின்றார். துரியோதன் விடுத்த அழைப்பைக் கொண்டு பாண்டவர்கள் அத்தினபுரம் வந்தபோது, திரு தராட்டிரனை வணங்கிய பின்னர் ஆரிய வீட்டுமன் அடி. வணங்கியதாகக் குறிப்பிடுகின்றார் கவிஞர். துச்சாதனனால் 5ി. ♔ 5.68. 287