பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற காவிய மாந்தர்கள் 97 அவைக்கு இழுத்து வரப்பெற்ற பாஞ்சாலி சபையில் நீதி கேட்டு அழும்போது இவன் பேசுகின்றான். 'தெயலே, தருமனே நீ நின்னைச் சூதில் தோற்றான். நீ அவன் செயலை மறுக்கின்றாய்; நின்னைப் பந்தயமாக வைத்ததே குற்ற மென்று வாதாடுகின்றாய். ... கோமகளே, பண்டையுக வேதமுனிவர் விதிப்படி, நீ சொல்லுவது நீதமெனக் கூடும்; நெருங்காலச் செய்தியது: ஆணொடுபெண் முற்றும் நிகரெனவே அந்நாளில் பேணிவந்தார். பின்னாளில் இஃது பெயர்ந்துபோய் இப்பொழுதை நூல்களினை எண்ணுங்கால், ஆடவருக்கு ஒப்பில்லை மாதர். ஒருவன்தன் தாரத்தை விற்றிடலாம்; தானமென வேற்றவர்க்குத் தந்திடலாம். முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை. தன்னை அடிமையென விற்றபின் னுந்தருமன் நின்னை அடிமையெனக் கொள்வதற்கு நீதியுண்டு. செல்லு நெறியறியார் செய்கையிங்குப் பார்த்திடிலோ கல்லும் நடுங்கும், விலங்குகளும் கண்புதைக்கும். செய்கை அநீதியென்று தேர்ந்தாலும்சாத்திரந்தான் வைக்கும் தெறியும் வழக்கமும் நீ கேட்பதனால் ஆங்கவையும் நின்சார்பி லாகா வகையுரைத்தேன் தீங்கு தடுக்கும் திறமிலேன்' என்று தான் செயற்படு நிலையில் இல்லாமையைத் தெளி வாக்குகின்றான். இதற்குமேல் இவன் பங்குபற்றிக் கவிஞர் குறிப்பிடவில்லை. 53. டிெ, 5.84: 271 (56-72) ur-7