பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற காவிய மாந்தர்கள் 99 கவன், நீ அன்றி, மகாபாரதம் அகற்ற மற்று ஆர்கொல் வல்லாரே?’ என்று அடக்கமாகத் தொடங்கி, "பார்ஆளக் கன்னன்இகல் பார்த்தனைமுன் கொன்று அணங்கின் கார்ஆர் குழல் களைந்து காலில் தளை பூட்டி நேராகக் கைபிடித்து நின்னையும்யான் கட்டுவனேல் வாராமல் காக்கலாம் மாபாரதம்' என்று கூறுகின்றான். உடனே கண்ணன் நீ உரைத்தபடி யாவும் முடிப்பினும், என்னைக் கட்ட இயலுமோ? என்று கேட்கின்றான். 'உன் வடிவு காட்டின் இயலும்!” என்று மறு மொழி பகல்கின்றான் சகாதேவன். மாயவனும் பதினாயிரம் வடிவு கொள்ளுகின்றான். சகாதேவன் மூலமாம் தோற்றம் உண்ர்ந்து, எவ்வுலகும் தாய அடி இணைகள் தன் கருத்தி னால் பிணைக்கின்றான். கண்ணனும் அன்பால் இன்று என்னை அறிந்தே பிணித்தமை நன்று என்பாதம் தன்னை விடுக!' என்று கேட்கின்றான். பின் நடப்பதை முன்னரே அறியும் யோகியாதலால் தூயவனும், வன்பாரதப்போரில் வந்தடைந்தேம் ஐவரையும் நின்பார்வை யால்காக்க வேண்டும் நெடுமாலே!" என்று வரம் வேண்டி, அதனைப் பெற்று கழலை விடுவிக்கின் றான். கண்ணனும் நிகழ்ந்ததைப் பிறர் அறிய மொழியா திருக்க உறுதி பெறுகின்றான். சகாதேவனிடம். எப்போதும் பிரும்மத்தில் சிந்தை செலுத்தியிருக்கும் சகாதேவன் மாய வனையும் பிணிக்கும் மாயன் ஆவதை நாம் உண்ர்ந்து மகிழ் இன்றோம். பஞ்ச்வரில் கடைக்குட்டியான இவன் இவ்வியல் லும் கடைசிக் கதை மாந்தனாகின்றான். 56. வில்லிபாரதம்: கிருட்டிணன் துது-33 57. டிெ. டிெ, 37