பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-1 அறிமுகம் நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப் பொழுதும் சோராது இருத்தல்" என்று கூறினவர் பாரதி. இமைப்பொழுதும் சோராதிருத் தல்’ என்பதுதான் இப்பாடலின் உயிர்நாடி சோர்ந்தவர் கள் யாருக்கு என்ன செய்ய முடியும்? தமக்குத்தான் ஏதாவது செய்து கொள்ள முடியுமா? ஏதோ ஒரு நல்ல நேரம். அது தமிழ் மொழி வளர்ச் சிக்கு நல்ல நேரமாய் விட்டது. புதிய பாணியில் காவியம் ஒன்று சமைத்து தமிழ் மொழியை வளப்படுத்த வேண்டும் என்று கருதுகின்றார் கவிஞர்; அதன் தொய்ந்து போன நிலைக்கு உயிர் ஊட்ட வேண்டும் என்று சிந்திக்கின்றார். தாம் படைக்கப் போகும் காவியம் எப்படி யிருக்க வேண்டும் என்பதை அவரே கூறுகின்றார். 'எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவிய மொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் ഷ് 1. தோத் , பாக்கள்.1.வி.நா. நான்மணி மாலை-25