பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஞ்சாலி சபதம் வாலை, உமாதேவி, மாகாளி, வீறுடையாள், மூலமா சக்தி, ஒரு மூவிலைமேல் கையேற்றாள், மாயை தொலைக்கும் மகாமாயை தானாவாள், பேயைக் கொலையைப் பிணக்குவையைக் கண்டு வப்பாள், சிங்கத்தி லேறிச் சிரித்தெவையும் காத்திடுவாள், நோவுங் கொலையும் நுவலொணாப் பீடைகளும் சாவும் சலிப்புமெனத் தான்பல் கணமுடையாள், கடாவெருமை ஏறுங் கருநிறத்துக் காலனார் இடாது பணிசெய்ய இலங்குமகா ராணி மங்களம் செல்வம் வளர்வாழ்நாள் நற்கீர்த்தி துங்கமுறு கல்வியெனச் சூழும் பல கணத்தாள், ஆக்கந்தா னாவாள், அழிவுநிலை யாவாள் போக்குவர வெய்தும் புதுமையெலாந் தானாவாள் மாறிமாறிப் பின்னும் மாறிமாறிப் பின்னும் மாறிமா றிப்போம் வழக்கம தானாவாள் ஆதி பராசக்தி-அவள் நெஞ்சம் வன்மையுறச் சோதிக் கதிர்விடுக்கும் சூரியனாந் தெய்வத்தின் முகத்தே இருள் படர--’ கவிஞரின் நீள்நோக்கு-இந்த அகிலத்தில் ஏற்படும் அனைத் துக் குழப்பங்களையும் ஒருசேரப் பார்க்கச் செய்யவல்ல அகில நோக்கு (Cosmic view) இந்தப்பகுதியில் தெளிவாகத் தென் படுகின்றது. தம் காலத்திலேயே இந்த அக்கிரமங்கள் அரசவையில் நடைபெறுவதாக நினைத்துத் தம் நெஞ்சுக் குமுறலை வெளியிடுகின்றார் கவிஞர். டிெ. 5.4:252-அடி (1-32)