பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-9 காப்பிய கடை ஒரு காப்பியத்தைப் படைக்கும் கவிஞன் கையாளும் நடையும் அக்காப்பியத்திற்குச் சிறப்பளிக்கும். மேனாட்டு இலக்கிய வரலாற்றைக் கவனித்தால் பற்பல காலங்களில் காப்பியத்தில் கையாளப்பெறும் பாநடை மாறி மாறித்தான் வந்துள்ளது. மில்ட்டன் துறக்க இழப்பை எழுதின பிறகு அகவல் நடைதான் (Biank verse) காப்பியத்திற்கு ஏற்றது என்ற கொள்கை நிலவி வந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றி லும் பெருக்காப்பியத்தை இயற்றினவர்கள் பற்பல நடை வகையினைத்தான் கையாண்டிருப்பதைக் காணலாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னர் எழுந்த காப்பியங்கள் யாவற்றிலும் பாக்கள் (சிறப்பாக அகவற்பா) பயின்று வந்தி ருத்தலையும், அதற்குப் பின்னர் எழுந்த காப்பியங்களில் பாவினங்கள் (தாழிசை, துறை, விருத்தம்) பயின்று வந்திருத் தலையும் காணலாம். ஆகவே, இம்மாதிரி தான் காப்பிய நடை அமைதல் தேண்டும்’ என்ற கட்டுப்பாடு என்றும் இருந்ததில்லை, இருக்கவும் முடியாது உன்பதை நாம் அறி கின்றோம். நடையைப்பற்றி மோனாட்டுத்திறனாய்வாளர் கூறி யுள்ளவற்றை ஈண்டுச் சித்தித்தல் பொருத்தமாக அமையும். நடை என்பது அடிப்படையில் தனிப்பட்ட எழுத்தாளரின்