பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பாஞ்சாலி சபதம் தனித்தன்மை வாய்ந்த சிறப்பியல்பு என்பதாகும். போப் என்பார் நடையை கருத்தின் ஒப்பணை' (Dross of thought) என்று கூறுவது பொருந்துமாறில்லை; காரணம், அவர் நடையின் சிறப்பியல்பாகவுள்ள உயிர்ப்பண்பைக் காணத் தவறி விட்டார். அஃது எழுத்தாளரினின்றும்வேறுபட்டதாகக் கருதுவது தெளிவாகின்றது: எழுத்தாளர் வேண்டாமென்றால் கழற்றி எறியவும் வேண்டுமென்றால், அணிந்து கொள்ளவும் கூடிய ஒரு குப்பாயமாக அல்லது ஒரு மேலங்கியாகக் கருதி விட்டார். இது தவறான மதிப்பீடு என்பது அங்கை நெல்லி யாகும். கார்லைல் என்பார் நடை என்பது எழுத்தாளரின் மேலங்கி அல்ல: அஃது அவருடைன் உடலின் தோலாகும் என்று தெளிவு படுத்தியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பெற்ற சொற்கள், கையாளப்பெறும் சொற்டொர்கள், வாக்கியங் கள் அமைப்பு முறை, வாக்கியங்களின் சந்தநயம், இசை யொழுங்கு-இப்பண்புகள் எழுத்தாளரின் தனித்திறமையைத் தனிப்பட்ட ஆளுமைப் பண்பை-வெளிபடுத்தி நிற்பதை அறியலாம். இப்பண்புகள் உரைநடைக்கேயன்றிப் பாநடைக் கும் நன்கு பொருந்தும். சிலவகை இலக்கியங்களை" படைத்துத் தனிப்பெரும் புகழையும் சிறப்பையும் அடைந்த சிலரது வரலாற்றை, வெண்பாவிற் புகழேந்தி, பரணிக்கோர் சயங்கொண்டான்; விருத்த மென்னும் ஒண்பாவில் உயர்கம்பன்; கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்; கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்; வசைபாடக் காளமேகம்; - பண்பாய பகர்சந்தம் படிக்காச லாலொருவர் பகரொணாதே. 1. தனிப்பாடல்