பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய நடை #09 இருக்க வேண்டும் என்று கருதும் கல்விச் செருக்குடைய புலவர்களும் அறிஞர்களும் பாஞ்சாலி சபதத்தின் இலக்கியச் சிறப்பையாவது அதன் ஆற்றலையாவது அறிந்து கொள்ள முடியாது. சாதாரண மக்களின் பேச்சுகளில் வரும் சொற்களைக் கையாண்டு சுயம்புவான இலக்கியச் சுவை கொப்பளிக்கும் படி செய்துள்ள பல இடங்களைக் காப்பியத்தில் கண்டு மகிழ லாம். அத்தின புரத்து வீரர்களைப்பற்றிக் கூறும் கரி, நூறினைத் தனிநின்று நொறுக்க வல்லார்’ என்ற அடியும், திருதராட்டிரன் சகுனியைக் கடிந்து கூறும்பொழுது, -'வெறும் நொள்ளைக் கதைகள் கதைக்கின்றாய், பழ நூலின் பொருளைச் சிதைக்கின்றாய்என்ற அடிகளும், தந்தையின் மீது சினங்கொண்டு துரியோ தனன் கூறும், -கெட்ட வேம்பு நிகரிவ னுக்குநான்;-சுவை மிக்க சருக்கரை பாண்டவர்; 'சொல்லின் நயங்கள் அறிந்திலேன்,-உனைச் சொல்லினில் வெல்ல விரும்பிலேன்;-கருங் கல்லிடை நாருரிப் பாருண்டோ?-நினைக் காரணம் காட்டுத லாகுமோ? மதித மக்கென் றிலாதவர் கோடி வண்மைச் சாத்திரக் கேள்விகள் கேட்டும் பதியும் சாத்திரத் துள்ளுறை காணார், பானைத் தேனில் அகப்பையைப் போல்வார் என்ற பகுதிகளும் விதுரனைப் பாண்டவர்கள் வரவேற்ற பகுதியில் வரும் மதுர மொழியில் குசலங்கள் பேசி என்ற அடியும் இதற்கு நல்ல சான்றுகளாகும். இம்மாதிரியான