பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ž பாஞ்சாலி சபதம்-ஒருநோக்கு மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக் குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும்’’’ இந்த நோக்கத்தைப் பாஞ்சாலி சபதம் முழுமையாக நிறைவேற்றி வைத்து விட்டது என்றே கருதலாம். தமிழ் ஜாதிக்குப் புதிய வாழ்வு தரவேண்டுமென்று கங்கணங் கட்டி திற்கும் பராசக்தியே என்னை இத்தொழிலிலே தூண்டினா காதலின், இதன் நடை நம்மவருக்குப் பிரியந் தருவதாகும் என்றே நம்புகிறேன்' என்று தம் முகவுரையையும் தலைக் கட்டுகின்றார். பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல்லாகும்! பயனன்றி உரைப்பாளோ? பாராய் நெஞ்சே! கேட்டது. நீ பெற்றிடுவாய், ஐய மில்லை; கேடில்லை தெய்வமுண்டு, வெற்றியுண்டு.” என்று கூறினவரல்லவா? தாம் இஷ்ட தெய்வமாகக் கொள்ளும் சக்திதேவியின்மீது எவ்வளவு ஊற்ற மிருந்தால் இத்தகைய நம்பிக்கை ஒளி தோன்றி யிருக்க வேண்டும்? திருவாய்மொழியை அருளிய நம்மாழ்வார், என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்து தன் சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்." 2. பாஞ்சாலி சபதத்துக்கு பாரதி எழு திய முகவுரை (தொடக்கம்) 3. தோத், பாக். 27. பேதை நெஞ்சே.5 4 திருவாய் 7.9.2