பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய நடை #1i மணிகளும் விற்பதோடு பிச்சை யெடுக்கவும் செய்கின்ற பெண்கள். மாயக் காரணம்மா-கிருஷ்ணன் மகுடிக் கார ணம்மா! என்று பாடும் நடை சூதாட்ட வருணனைக்கும் அதிலேற்படும் பரபரத்த சொற்களையும் செய்கைகளையும் விளக்கு வதற்கும் மிகவும் பொருந்தியதென்பது எளிதில் அறியப் பெறும். மாயச் சூதி னுக்கே- ஐயன் மனமி ரங்கி விட்டான்; தாய முருட்ட லானார்;-அங்கே சகுனி ஆர்ப்ப ரித்தான்! நேய முற்ற விதுரன்-போலே, நெறியுளோர்களெல்லாம் வாயை மூடி விட்டார்;-தங்கள் மதிம யங்கி விட்டார் என்றும், காயு ருட்ட லானார்-சூதுக் களிதொடங்க லானார் மாய முள்ள சகுனி-பின்னும் வார்த்தை சொல்லுகின்றான்; 'நீஅ ழித்த தெல்லாம்-பின்னும், நின்னி டத்து மீளும் ஒய்வ டைந்தி டாதே-தருமா! ஊக்க மெய்து கென்றான். என்றும் வரும் பகுதிகளில் இப்பண்புகளைக் காணலாம். தாயக் கட்டைகள் போடும்போது ஏற்படும் ஒலிகளை யொட்டியே இந்தப் பகுதிகள் அமைந்து மிகவும் கனிந்த நாடகத் தன்மையுடன் மிளிர்கின்றன.